உள்ளச்சம் : விஜய் ரெங்கராஜன்

September 21, 2025
அஷ்வத்தின் கண்கள் அர்ஜுனை நேருக்கு நேர் சந்திக்க மறுத்தன. கைகளைக் கட்டிக்கொண்டே அவன் பேசினான், “நாங்க டீசன்ட்டாகத்தானே சொல்கிறோம். எங்களை வேறு மாதிரி நிர்ப்பந்திக்க வைக்காதீர்கள்.” சொன்னதை விடச் சொல்லாததில் அதிக அழுத்தம் இருப்பது போல நிறுத்திப் பேசினான். “அர்ஜுன், உனக்கு என்னைத் தெரியும். இதைச் செய்ய எனக்கு பிடிக்கவில்லை என்றும் உனக்குத் தெரியும். ஆனால் நான் என் குடும்பத்தையும், என் மகளையும் பற்றி யோசிக்க வேண்டும். நீ மாறிவிட்டாய், முன்பிருந்த மாதிரி இல்லை. நீ மட்டும் தனியாகத் தங்குவதில் யாருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.