April 04, 2025
எனக்கு எல்லாம்
கேட்டப் பாடலாக இருக்கிறது. எல்லா உணர்வுகளும் தேய்மானமடைந்தார் போல் படுகிறது. பிடித்தப் பாடல்களையெல்லாம் அத்தனை உணர்ச்சிக்கும் ஒப்பேற்றி சலித்துவிட்டேன்
April 04,2025
அறிவுத்தள பங்களிப்புகளை வரவேற்கும்விதமாக அகழில் வெளியாகும் நேர்க்காணல்களுக்கும், கட்டுரைகளுக்கும் தன் “S நிறுவனத்தின் (S Travel pvt ltd - Switzerland)” நிறுவனத்தின் வாயிலாக கௌரவ சன்மானம் அளிக்க முன்வந்திருக்கிறார். மொழிபெயர்ப்புகளும் அதில் அடங்கும்.
April 02, 2025
சொல்மொழி வகைமை அமைந்த பிறகு, இசைமொழி வகைமை அமைக்கலாயினர். இசை மொழியாக விரிய, சொல் இசையாக மலர்ந்தது. கழனிப்பாடல் வேட்டைப்பாடல் மீன்பிடிபாடல் பல கண்டு, படிகள் ஐந்தென முதலில் வரையறுத்தனர். மனம் மயக்கும் முல்லையாய் மோகனமாய் இசை மிளிர்ந்தது. மேலும் பாடல் பல கேட்டு, வானில் மழைவில் நிறங்கள் கண்டு, சுரங்கள் ஏழென உயர்த்தினர்.
March 31, 2025
காலனிய எதிர்ப்பு சிந்தனையாளர்கள் காலனியம் உருவாக்கிய பொருளாதார அழிப்புகள், கலாச்சார அழிப்புகள், திணிப்புகளை பற்றிப் பேசும் அதே நேரம் அரசியல்ரீதியில் காலனியம் உருவாக்கிய பிரச்சனைகளை பேசவதில்லை. தேசியமும் அப்படி ஒரு பிரச்சனை. காலனிய அமைப்பு உருவாக்கிய அரசியல் கட்டமைப்புகளை நாம் கேள்விக்குட்படுத்தவில்லை என்ற விமர்சனத்தை மஹ்மூட் மம்தானி (Mahmood Mamdani) முன்வைப்பார். ஐரோப்பிய காலனியமானது தேசியம், சமூக ஒப்பந்தம், இனமய முதலாளிதத்துவம், அரச நிர்வாக அமைப்பு
April 29, 2025
மனித உரிமைகளின் மொழியென்பது, உள்ளார்ந்த இயல்பிலேயே, நிலவும் அசமத்துவமான நிலமைகளை ஏற்றுக்கொண்டு அதனிடமே சமத்துவத்தைக் கோருவதை முன்நிபந்தனையாகக் கொண்டது. இங்கு மனித உரிமைச் சொல்லாடல்கள் குறித்து அருந்ததி ராய் கூறுவது நினைவு கூரத் தக்கது. "மனித உரிமைகள் எனும் கருத்து என்னை சில சமயங்களில் தொந்தரவு செய்கிறது. ஏனெனில், அதனைக் காட்டிலும் உயர்வான கருத்தான நீதியை அது மறக்கடித்துள்ளது. மனித உரிமைகள் என்பது வெறுமனே உயிர்வாழ்வதற்கான உரிமைகள்.
March 27, 202225
அவன் கவரைத் திறந்து படுக்கையில் கவிழ்த்தான். கிழிக்கப்பட்ட ஒரு போட்டோவின் பகுதி இருந்தது. அது ஒரு பெண்ணின் வலது கண் உள்ள பகுதி. தனியாக அந்த வலது கண்ணைப் பார்த்தது அச்சுறுத்துவது போல் இருந்தது.
March 25, 2025
மனிதன் கண்டடைந்த உண்மையின் பிரதிநிதியாக மொழி ஆகவில்லை, மொழி உருவாக்கிய உண்மை அவனின் உண்மையாக மாறியது. மொழி சிருஷ்டித்த இடம் அசலான இடத்தைவிட விசாலமானதாக இல்லை. இன்று நாம் வாழும் எந்த நிலப்பரப்பும் மூச்சுத்திணரவைக்கும் மொழிப்பிராந்தியமும்கூட. மொழி உருவான பிறகு நாம் சொல்லாததை கேட்கமுடியாத, எழுதாததை வாசிக்கமுடியாத எல்லைக்குட்பட்ட உலகில் வாழ ஆரம்பித்துவிட்டோம். ”உணவு அல்லாத எதையும் நம்மால் உட்கொள்ள முடிவதில்லை” என்ற குஞ்ஞுண்ணியின் கவிதைவரி சுட்டுவது