காந்தியின் மரணம் – ஒரு தேசம் எழுப்பிய பலிபீடம் : வீ.செ.செந்தில்குமார்

August 09, 2024
அதிகார மற்றும் ஊழல் ஆட்சி செய்வதற்கு காந்தி தங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பதை காங்கரஸ் தலைவர்கள் நன்கு அறிந்திருப்பர். தாராளவாத முற்போக்கினரும் இன்றுவரை காந்திய கருத்துக்கள் மேல் விமர்சனப்போக்கு கொண்டிருக்கிறார்கள். நவீன வளர்ச்சியின் அபிரிதமான பசிக்கும் காந்தி எதிரானவர். காந்தி இந்திய தேசத்தின் உளச் சான்று. பல நேரங்களில் நம் மனசாட்சியை எதிரியெனவே கருதுகிறோம். அது மௌனமாய் இருக்கவே விரும்புகிறோம்.