வால்நட்சத்திரம் : சந்திரா தங்கராஜ்

February 10, 2025
புதையுண்டவர்கள் அழுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.  என்னிடம் அவர் அதை சொல்லியிருக்கவே கூடாதென நினைத்தேன்.  அன்றிலிருந்து மரணித்தவர்களின்  துக்க நிழல்கள் என்மேல் படரத் தொடங்கின. உள்ளுக்குள் ஒரு அலை அடித்து இறந்தவர்களின் அமைதியின்மையும் தனிமையும் எனக்குள் இறங்கியது.