ஒளிரொலி : விஜய் ரெங்கராஜன்

April 02, 2025
சொல்மொழி வகைமை அமைந்த பிறகு, இசைமொழி வகைமை அமைக்கலாயினர். இசை மொழியாக விரிய, சொல் இசையாக மலர்ந்தது. கழனிப்பாடல் வேட்டைப்பாடல் மீன்பிடிபாடல் பல கண்டு, படிகள் ஐந்தென முதலில் வரையறுத்தனர். மனம் மயக்கும் முல்லையாய் மோகனமாய் இசை மிளிர்ந்தது. மேலும் பாடல் பல கேட்டு, வானில் மழைவில் நிறங்கள் கண்டு, சுரங்கள் ஏழென உயர்த்தினர்.