
கார்த்திக் பிரகாசம்
சேலத்தை சேர்ந்த கார்த்திக் பிரகாசம் தற்போது சென்னையில் வசித்து வருகிறார். பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள், சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன.

கார்த்திக் புகழேந்தி
எழுத்தாளர், பத்திரிகையாளர். நாட்டுப்புறவியல்,நெல்லைத் தமிழ் ஆய்வு, சங்க இலக்கியம், கல்வெட்டு வாசிப்பு மற்றும் பண்பாட்டு ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார். முதன்மையாக சிறுகதை எழுத்தாளராக புகழ்பெற்றிருக்கிறார். தமிழ் விக்கியில்

கார்த்திக் ராமச்சந்திரன்
மதுரையில் வசிக்கும் இவர், கல்லூரிப் பருவம் முதலே இலக்கியம் மற்றும் நாடகங்களில் ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார். அமெரிக்கன் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடங்கிய இவர், தற்போது மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுத்துறையில் முனைவர் பட்ட ஆய்வாளராக உள்ளார். 2021ஆம் ஆண்டு வெளியான தமிழறம்: நாட்டுப்புறவியல் சிறப்பிதழ் என்ற பிரத்யேக இதழின் ஆசிரியருள் ஒருவராக இருந்தார். தமிழ் ஆய்வாளர்களிடம் மிகுந்த கவனம் பெற்ற இதழாக இது விளங்கியது. சினிமா, பண்பாட்டு ஆய்வு, இலக்கிய திறனாய்வு ஆகிய துறைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் நீலம், காலச்சுவடு, மணல்வீடு ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. மேலும், மதுரையில் Reader’s Desk என்ற பெயரில் இலக்கியக் கூட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறார்.

கிரிசாந்
யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் "வாழ்க்கைக்கு திரும்புதல்" என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட "மயான காண்டம்" என்ற கூட்டுத் தொகுப்பிலும் தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர்.

கீரனூர் ஜாகிர்ராஜா
கீரனூர் ஜாகிர்ராஜா இஸ்லாமிய அடித்தள மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதிவரும் முதன்மையான படைப்பாளி. நாவல், சிறுகதை, விமர்சனம்,தொகை நூல்கள், சிறார் இலக்கியம் என கால் நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கி வருகிறார்

கு.அ.தமிழ்மொழி
கு.அ.தமிழ்மொழி கவிஞர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார்.

குணா கந்தசாமி
சிறுகதை ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படும் 'குணா கந்தசாமி' சமகாலத்தில் பல்வேறு மதிப்புரை கட்டுரைகளும் எழுதிவருகிறார். கற்றாழைப் பச்சை, புலியின் கோடுகள், உலகில் ஒருவன், மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர் ஆகிய நூல்ககளின் ஆசிரியர்.

குமாரநந்தன்
குமாரநந்தன் சிறுகதைகள், கவிதைகள் புனைபவர். பகற் கனவுகளின் நடனம் என்ற கவிதைத் தொகுப்பும், பதிமூன்று மீன்கள், பூமியெங்கும் பூரணியின் நிழல், நகரப் பாடகன், மகா மாயா ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி உள்ளன. சேலம் அருகே மல்லூரில் வசிக்கிறார்.

கே.என்.செந்தில்
கே.என்.செந்தில் படைப்பிலக்கியத்திலும்,படைப்பிலக்கிய விமர்சனத்திலும் தொடர்ச்சியாக சீராக இயங்கும் படைப்பாளி. கூர்மையான சொல்முறை கொண்ட இவருடைய கதைகள் சிறுகதையின் வடிவம் சார்ந்த எல்லைகளை விரிவாக்குகின்றன

கே.டீ. தர்ஷன
சுயாதீன விமர்சகரும் எழுத்தாளரும் ஆவார். இலக்கிய விமர்சனங்கள், கவிதைகள், சிறுகதைகள் முதலானவற்றில் தொடர்ச்சியாக இயங்குகிறார்.
கோபயாஷி இஸ்ஸா

கோ. புண்ணியவான்
மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர். ஐம்பது ஆண்டுகளாக இடைவிடாது எழுதியும் இயக்கங்கள் வழி பங்காற்றியும் வருபவர். கோ.புண்ணியவான் மலேசியாவில் நவீன சிறுகதை எழுத்தில் மூத்தவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாலமாகச் செயல்படுகிறார். அவரது படைப்புகள் மலேசிய நவீன தமிழ் இலக்கிய நகர்ச்சியையும் வளர்ச்சியையும் மிகச்சிறப்பாக அடையாளம் காட்டி நிற்கின்றன." என்று அ.பாண்டியன் மதிப்பிடுகிறார்.

கோசலை மதன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர். கற்பித்தலுக்கு அப்பாலும் சமூகத்தில் பெண்கள் உரிமைகள், சிறுவர் உரிமைகள்,தொழிலாளர் உரிமைகள், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள், வழக்காற்றுச் சட்டங்கள் முதலானவை தொடர்பில் மக்களை அறிவூட்டும் வகையில் தனது பங்களிப்பை வழங்கிவருபவர்

ச.அர்ஜூன்ராச்
சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. "ராஜ Single " கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

ச.துரை
ச.துரை, ராமேஸ்வரம் அருகேயுள்ள மண்டபம் ஊரில் வசித்துவருகிறார். ‘மத்தி’ என்ற கவிதைத்தொகுப்பின் ஊடாக பரவலான கவினிப்பைப் பெற்றவர்.

ச.வி. சங்கர நாராயணன்
ச.வி.சங்கரநாராயணன் சமகால இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார். "விறலி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

சக்கரவர்த்தி
சக்கரவர்த்தி கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் எழுத்தாளர். இவரின் ‘யுத்தசன்யாசம்’ என்ற கவிதை நூலும், ‘யுத்தத்தின் இரண்டாம் பாகம்’ என்ற சிறுகதைத் தொகுப்பும் இதுவரை வெளியாகியுள்ளன.

சங்கரன் ரவிச்சந்திரன்
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். அறிவியல் எழுத்துக்களில் முதன்மையாக ஈடுபாடு கொண்டுள்ளார். கார்லோ ரொவெல்லியின் "இயற்பியலின் ஏழு சுருக்கக் குறிப்புகள்" இவருடைய மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.
சஜன் பரந்தாமன்
தற்சமயம் பணி நிமித்தம் ஜெர்மனியில் வசித்துவருகிறார். மொழியாக்கம் மீது ஆர்வம் கொண்டவர். பல்வேறு புனைப்பெயர்களில் கவிதைகள் எழுதியுள்ளார்.

சதீஷ் குமார் RM
சதீஷ் குமார் RM. பெங்களூரில் கணிபொறித்துறையில் பணியாற்றுகிறார் இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர்.

சதீஷ்குமார் சீனிவாசன்
சதீஷ்குமார் சீனிவாசன் தமிழில் எழுதிவரும் கவிஞர். தொடர்ந்து இணைய இதழ்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதிவருகிறார். உயிர்மை இணைய இதழின் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார்.

சந்திரா தங்கராஜ்
சந்திரா தங்கராஜ் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், திரைப்பட இயக்குனர். மலைநிலத்தின் இயற்கைச் சித்தரிப்பும், இழந்தவற்றிற்கான ஏக்கமும், நாட்டார் கதைகளின் சாயலும், பெண் மனத்தின் நுட்பமான அவதானங்களும் கொண்டவை அவரது படைப்புகள்.

சபரிநாதன்
சபரிநாதன். கவிதைகள், விமர்சனத் திறனாய்வு ஆகிய துறைகளில் தீவிரமாக ஈடுபடுகிறவர். "களம் காலம் ஆட்டம்", "வால்" என்று இரண்டு கவிதைத் தொகுதிகள் வெளியிட்டுள்ளார். விகடன் விருது, விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது, யுவபுரஸ்கார் விருது ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

சப்னாஸ் ஹாசிம்
சப்னாஸ் ஹாசிம், அக்கரைப்பற்றைச் சேர்ந்தவர். ‘நிணக் கவிதைகளில் அப்பிய சொற்கள்’ என்ற கவிதைப் புத்தகத்தின் ஆசிரியர்.

சம்யுக்தா மாயா
சம்யுக்தா மாயா தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்தவர். தற்போது தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 2016ல் உயிர்மை பதிப்பகத்தில் இவருடைய "டல்ஹொஸியின் ஆரஞ்சு இரவு" என்கிற கவிதை நூலும் 2023ல் "தீ நின்ற பாதம்" என்கிற இரண்டாவது கவிதை நூல் சால்ட் பதிப்பகத்திலும் வெளிவந்துள்ளது.

சயந்தன்
ஈழத்தமிழ் எழுத்தாளர். புலம்பெயர்ந்து சுவிட்ஸர்லாந்தில் வாழ்கிறார். ஈழப் போரிலக்கியத்தின் முக்கிய பிரதிகளான ஆறாவடு, ஆதிரை, அஷேரா ஆகிய நாவல்களின் ஊடாக வாசகர்கள் மத்தியில் பரந்த அறிமுகத்தைப் பெற்றார்.

சரத் விஜேசூரிய
பிரபல சிங்கள எழுத்தாளர். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் சிங்களப் பிரிவு பேராசிரியராகவும் கடமையாற்றுகிறார். நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் நூல்கள், கட்டுரைகள், இலக்கிய நூல்கள், சுய முன்னேற்ற நூல்கள், மொழிபெயர்ப்புகள் என நூற்றுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கிறார்.

சர்வோத்தமன் சடகோபன்
சர்வோத்தமன் சடகோபன் பெங்களூரில் தற்சமயம் வசித்துவருகிறார். தஸ்தாயெவ்ஸ்கியின் புத்தகச் சாலை என்ற வலைப்பக்கம் ஒன்றினையும் நடத்தி வருகிறார். 'முறையிட ஒரு கடவுள்' என்கிற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.
சஹானா
கவிஞர் சஹானா "கண்ணறியாக் காற்று", "அஞ்சனக்கண்ணி" ஆகிய கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர்.

சாகிப்கிரான்
கவிஞர், எழுத்தாளர். வண்ணச் சிதைவுகள், அரோரா ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புககளின் ஆசிரயர். "அறிவின் பயனின்மையும், அறிவு எரிந்த பிறகே தோன்றும் அழகு குறித்த துக்கமும், எல்லையற்றதின் மீதான திகைப்பும் சாகிப்ரானின் கவிதையில் தென்படுகிறது" என்று கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.