எழுத்தாளர்கள்

சஹானா

கவிஞர் சஹானா "கண்ணறியாக் காற்று", "அஞ்சனக்கண்ணி" ஆகிய கவிதைத் தொகுதிகளின் ஆசிரியர்.  

சாகிப்கிரான்

கவிஞர், எழுத்தாளர். வண்ணச் சிதைவுகள், அரோரா ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புககளின் ஆசிரயர். "அறிவின் பயனின்மையும், அறிவு எரிந்த பிறகே தோன்றும் அழகு குறித்த துக்கமும், எல்லையற்றதின் மீதான திகைப்பும் சாகிப்ரானின் கவிதையில் தென்படுகிறது" என்று கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் மதிப்பிடுகிறார்.

சாம்ராஜ்

சாம்ராஜ் (மே 26, 1972) தமிழில் கவிதைகள் கட்டுரைகள், சிறுகதைகள் மற்றும் சினிமா விமர்சனங்கள் எழுதிவரும் எழுத்தாளர். சென்னையில் வசிக்கிறார். திரைத்துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். அங்கதமும் பகடியும் கொண்ட கதைகளையும் கவிதைகளையும் எழுதுபவர்.

தமிழ் விக்கியில்

சாரா அபு ரஷீத்
சார்லஸ் சிமிக்

சார்லஸ் சிமிக் அமெரிக்கவை சேர்ந்த புலிட்செர் பரிசு பெற்ற கவிஞர். இருபத்திற்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகள், ஏழு கட்டுரை தொகுப்புகள், ஏராளமான மொழிபெயர்ப்புகள் என வாழ்நாள் முழுவதும் எழுதிக் குவித்தவர். உலக இலக்கியத்தில், கடந்த ஐம்பது வருடங்களின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறா

சித்தாந்தன்

யாழ்ப்பாணம் கோண்டாவி்லில் வசித்தது வருகின்றார். சித்தாந்தன் கவிதைகளுடன் சிறுகதைகளும் விமர்சனங்களும் எழுதி வருகின்றார். ‘காலத்தின் புன்னகை’, ‘துரத்தும் நிழல்களின் யுகம்’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. மறுபாதி என்னும் கவிதைக்கான சஞ்சிகையை நடத்திவருகிறார்.

சித்ரன்

சித்ரன் சிறுகதை ஆசிரியர். குறுங்கதைகளும் எழுதியிருக்கிறார்.  'கனாத்திறமுரைத்த காதைகள்', ‘பொற்பனையான்’ என்ற இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.

தமிழ் விக்கியில்

சியாம்

சியாம். சென்னையில் தனியார் நிறுவனத்தில் இயந்திர வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இலக்கியத்துடன் கர்நாடக இசையிலும் ஆர்வம் உள்ளவர்.

சிறில் அலெக்ஸ்

சிறில் அலெக்ஸ் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பிரித்தானிய எழுத்தாளர் ராய்மாக்ஸத்தின்  'உப்பு வேலி' மற்றும் 'தே ஒரு இலையின் வரலாறு' புத்தகங்களை தமிழாக்கம் செய்துள்ளார்.

தமிழ் விக்கியில் 

சிவசங்கர். எஸ்.ஜே

சிவசங்கர். எஸ்.ஜே  புனைவெழுத்தாளர், ஆய்வாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கியச் செயல்பாட்டாளர். இடதுசாரி இலக்கிய அமைப்பான கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர். அம்பேத்கர் கடிதங்கள் போன்ற மொழியாக்கங்களைச் செய்தவர். குமரிமாவட்ட பண்பாட்டாய்விலும் ஈடுபட்டு வருகிறார்.

தமிழ்விக்கியில் 

சிவா கிருஷ்ணமூர்த்தி

சிவா கிருஷ்ணமூர்த்தி நாகர்கோவிலை பிறப்பிடமாகக் கொண்டவர். தற்பொழுது பிரித்தானியாவில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். ‘வெளிச்சமும் வெயிலும்’ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

சீமஸ் ஹீனி

(Seamus Heaney 1939-2013)

ஐயர்லாந்து நாட்டைச் சேர்ந்த,  சீமஸ் ஹீனி, 1995ம் வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். ஐயர்லாந்து நாட்டின் கலாச்சார அடையாளங்களில் ஒருவரான திரு.ஹீனி, ஐயர்லாந்தில் வில்லியம்.பி.யீட்ஸ்க்கு பிறகு தோன்றிய மிக முக்கியமான கவிஞர் என்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டவர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் அளவுக்கு சீமஸ் ஹீனியின் பிரபலம் இருக்கிறது.

சு. தவச்செல்வன்

சு. தவச்செல்வன், இலங்கையில் ஹற்றனை அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். ஆடுபாலம், சிங்க மலை என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. டார்வினின் பூனைகள், சிவப்பு டைனோசர்கள், படைப்பும் படைப்பாளுமையும் என வேறு பல நூல்களையும் எழுதியுள்ளார். ஆய்வாளர், விமர்சகர்.

சு.வெங்கட்

சு.வெங்கட் தமிழில் இலக்கிய சிறுகதைகள், விமர்சனம்எழுதி வருகறார். இவரது சிறுகதைகள் தமிழ் இலக்கியமின்னிதழ்களில் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் மிசௌரி மாகாணத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் எழுதிய சிறுகதைகள் "நினைவுகள் விற்பனைக்கல்ல" என்றபெயரில் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது.

சுகுமாரன்

தமிழில் எழுதி வரும் கவிஞர். எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், கட்டுரையாளர். இதழாசிரியராகவும் தொலைக்காட்சி செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். சுகுமாரன் தமிழ்ப்புதுக்கவிதையின் முதன்மை ஆளுமைகளில் ஒருவராக கருதப்படுகிறார்.

தமிழ்விக்கியில் 

சுசித்ரா

சுசித்ரா தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். இருத்தலியல் சார்ந்த வாழ்வின் ஆதார கேள்விகளை கலை, அறிவியல் பின்புலங்களில் எழுப்பி கதைகளில் விவாதிக்கிறார். ஒளி சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

சுஜய் ரகு

கவிதைகள், கவிதை மதிப்பீடுகள் தொடர்ச்சியாக இணைய இதழ்களில் எழுதிவருகிறார். "நிலவு சிதறாத வெளி" என்கிற கவிதைத்தொகுப்பு வெளியாகியுள்ளது.

சுதா ஸ்ரீனிவாசன்

இலக்கிய நூல் பிழைதிருத்துநர். சிறுகதை ஆசிரியர். பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்தில் பணிசெய்து விருப்ப ஓய்வு பெற்றவர், கோவையில் வசிக்கிறார்.

சுனில் கிருஷ்ணன்

காரைக்குடியில் வசிக்கும் சுனில் கிருஷ்ணன் சிறுகதையாசிரியராகவும், நாவலாசிரியராகவும் நன்கு அறியப்பட்டவர். காந்தியத்தின் மீது ஈர்ப்புக் கொண்டவர். விமர்சனத் துறையில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

சுரேஷ் பிரதீப்

தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தொடர்ச்சியாக புனைவுகள், விமர்சனங்கள் எழுதிவருகிறார். அழகியலை முன்னிலைப்படுத்தி எழுத்தாளர்களின் சிறப்பியல்புகளை நுட்பமாக மதிப்பிடுபவர்.ஒளிர் நிழல் என்ற நாவலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புக்களும் வெளியாகியுள்ளன.

சுரேஷ்குமார இந்திரஜித்

சுரேஷ்குமார இந்திரஜித்  தமிழில் எழுதி வரும் எழுத்தாளர். சிறுகதை, நாவல், குறுங்கதைகள், கட்டுரைகள், மதிப்புரைகள் எழுதி வருகிறார். ஆண் பெண் உறவுகளின் சிக்கல்கள், காமம், சமூக அவலங்கள் குறித்த கதைக்களங்களில் எழுதி வருபவர்.

தமிழ் விக்கியில்

செந்தில் ஜெகன்நாதன்

செந்தில் ஜெகன்நாதன், தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். திரைத்துறையில் பணியாற்றுகிறார்.
தமிழ் விக்கியில்

 

செந்தூரன் ஈஸ்வரநாதன்

இயற்பெயர் சுதர்சன் ஈஸ்வரநாதன்; செந்தூரன் ஈஸ்வரநாதன் எனும் புனைபெயரில் கதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். கருத்துரிமை, மனித உரிமைகள், இலக்கியம் தொடர்பில் எழுதிக்கொண்டிருப்பவர். தற்சமயம் நாகர்கோவிலில் வசித்துவருகிறார். 13 வருடங்களாக இதழியல், பதிப்பகத் துறையில் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

செல்வசங்கரன்

விருதுநகரில் வசித்து வருகிறார், தமிழ்ப் பேராசிரியர். சிற்றிதழ்களில் தொடர்ச்சியாகக் கவிதைகள் எழுதிவருகிறார். ஆதவன் (கே.எஸ். சுந்தரம்) படைப்புகளை முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்துள்ளார். ‘அறியப்படாத மலர்’ (2013), ‘பறவை பார்த்தல்’ (2017), ‘கனிவின் சைஸ்’ (2018), ‘சாலையின் பிரசித்தி பெற்ற அமைதி’ (2020), மத்தியான நதி, 'கண்ணாடி சத்தம்' உட்பட பல கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.

செல்வேந்திரன்

செல்வேந்திரன் தமிழில் எழுதிவரும் எழுத்தாளர், கட்டுரையாளர், சொற்பொழிவாளர். தற்போது ஊடக ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார்.

சேனன்

’லண்டன்காரர்’, ’சித்தார்த்தனின் வினோதச் சம்பவங்கள்’ நாவல்களின் ஆசிரியர். அரசியல் செயற்பாட்டாளர். லண்டனில் வசித்துவருகிறார்.

சேரன்

சேரன், யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தவர். கவிதைகள் உட்பட பத்திகள், அரசியல் கட்டுரைகள்,  நாடகங்கள் என ஏராளமாக தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். இவரது ஆங்கில நாடகங்கள் கனடா, அமெரிக்காவில் மேடையேற்றப்பட்டுள்ளன. தற்சமயம் கனடா, விண்சர் பல்கலைக்கழகத்தில் சமூகவியல், மானுடவியல் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ஈழத்தின் யுத்த வடுக்களை, சிதைவுகளை ஆரம்பகாலம் தொட்டு தன் கவிதைகளில் வெளிப்படுத்துபவர்.

சோ.விஜயகுமார்

சோ.விஜய குமார், தமிழில் எழுதிவரும் கவிஞர். உணர்வுத்தீவிரமான கவிதைகளை எழுதுபவர். உயிர்மை இதழின் இணையாசிரியராகப் பணியாற்றினார். "ஒரு ஸ்க்ரோல் தூரம் - (2023)", "சிற்றெறும்பின் நிழல் (2024)","அம்மாவிற்கு ஒரு கண்ணில் பூ(2025)", ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

தமிழ் விக்கியில்

ஜனார்த்தனன் இளங்கோ

ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.

ஜா.ராஜகோபாலன்

ஜா.ராஜகோபாலன் சென்னையில் தற்சயமயம் வசிக்கிறார். கட்டுரையாளர், இலக்கிய விமர்சகர், மேடைப் பேச்சாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.

தமிழ் விக்கியில்

Go toTop