
ஜானி
ஜானி எம்.எல் மலையாளத்தில் எழுதிவரும் எழுத்தாளர், விமர்சகர் ஆவார். பல்வேறு அச்சு மற்றும் இணைய இதழ்களுக்கு ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

ஜான் சுந்தர்
ஜான் சுந்தர். எழுத்தாளர், மேடைப்பாடகர், இசைக் கலைஞர், கவிஞர். கவிதைகள், சிறுகதைகள் எழுதி வருகிறார். சொந்த ரயில்காரி, பறப்பன திரிவன சிரிப்பன, நகலிசைக்கலைஞன் முதலிய நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் விக்கியில்

ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்
ஜி.எஸ்.எஸ்.வி.நவீன் சிறுகதைகள், விமர்சனங்கள், நேர்காணல் செய்வதில் சமகாலத்தில் தீவீரமாக ஈடுபட்டு வருகிறார். தகவல் தொழில்நுட்ப துறையில் பெங்களூரில் வேலை பார்க்கிறார்.

ஜி.ஏ. கௌதம்
திரைப்படத் தொகுப்பாளர், எழுத்தாளர், மற்றும் மொழிபெயர்ப்பாளர். காட்சி தகவல் தொடர்பு துறையில் (Visual Communication) தனது முதுகலைப் படிப்பை நிறைவு செய்தவர். ‘டக்கர்’, 'மரகத நாணயம்’, ‘மின்னல் முரளி’ உட்பட பல்வேறு திரைப்படங்களிலும், குறும்படங்கள், இணையத் தொடர்கள், ஆவணப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களிலும் பணிபுரிந்திருக்கிறார்.
திரைப்படங்கள் குறித்த கட்டுரைகளையும், திரைப்பட தயாரிப்பு முறை குறித்த நுணுக்கமான ஆய்வுகளையும், சமகாலப் பிரச்சனைகள் குறித்த அபுனைவுகளையும், தமிழ் மற்றும் ஆங்கில முன்னணி இதழ்களில் எழுதி வருகிறார்.
மரியோ வர்காஸ் யோசா, ஒடெசா மோஷ்ஃபெக், வீயத் தான் நவென், தாரா கேம்பெல், ஜுனோட் டயஸ், பென் ஓக்ரி உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளையும், கட்டுரைகளையும், பேட்டிகளையும் தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறார்.

ஜிஃப்ரி ஹாஸன்
கிழக்கு இலங்கையில் பாலைநகர் என்ற கிராமத்தில் பிறந்தவர். குறிப்பிடத்தக்க சிறுகதைகளையும் கவிதைகளையும் இலக்கிய மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். இவருடைய இலங்கையில் போருக்குப் பின்னரான அரசியல்பற்றிப் பேசும் ‘அரசியல் பௌத்தம்’ என்ற புத்தகம் முக்கியமானது.

ஜீவன் பென்னி
ஜீவன் பென்னி, தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர். சிற்றிதழ்கள், இணையை இதழ்களில் கவிதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

ஜெகதீஷ் குமார்

ஜெயதேவ உயன்கொட
அரசியல் விஞ்ஞானியான ஜெயதேவ உயன்கொட இலங்கையில் அரசியலமைப்பு நிபுணரும் ஆவார். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் அரசறிவியலில் மூத்த பேராசிரியராகக் கடமையாற்றியுள்ளார். இலங்கையின் இனமோதல், சிறுபான்மையினரின் உரிமைகள், இலங்கையின் மாகாணச் சீர்திருத்தங்கள் முதலாக விடயதானங்களைப் பெருமளவிற்கு எழுதியுள்ளார்.

ஜே.கே
அவுஸ்ரேலியாவில் வசித்துவரும் ஜே.கே, ‘படலை’ என்ற வலைத்தளத்தில் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் எழுதிய ‘என் கொல்லைப்புறத்து காதலிகள்’ நூல் நல்ல கவனிப்பை பெற்றது. சமாதானத்தின் கதை என்ற சிறுகதைத்தொகுப்பும், கந்தசாமியும் கலக்சியும் என்ற நாவலும் இதுவரை அச்சுப்பதிப்பாக வெளிவந்து வரவேற்பைப் பெற்றன.

ஞானக்கூத்தன்
தமிழ் நவீனக் கவிஞர். கவிதைக் கோட்பாடு, கவிதை விமர்சனம் என முழுமையாகவே கவிதை சார்ந்து செயல்பட்டவர். பகடியும் அங்கதமும் கொண்ட கவிதைகளுக்காக அறியப்பட்டவர். கசடதபற என்னும் இலக்கிய இதழுடன் தொடர்புகொண்டு செயல்பட்டார்.

டி.எஸ்.எலியட்
இருபதாம் நூற்றாண்டின் முக்கிய கவிஞர்களில் ஒருவராகவும் விளங்கியவர். நவீனத்துவத்தின் பிதாமகராகக் கருதப்படுகிறார். நுட்பமான இலக்கியத் திறனாய்வு நூல்களும், நாடகங்களும் எழுதியிருக்கிறார். 'பாழ்நிலம்' படைப்புக்காக நோபால் பரிசு வென்ற ஆங்கிலக் கவிஞர்.

டி.ஏ. பாரி
டி.ஏ.பாரிஇலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர். ஈரோட்டில் வசிக்கிறார். ஆங்கில சிறுகதைகளை, பிரதானமாக ஐசக் பாஷாவிஸ் சிங்கரின் கதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறார்.

டில்சா ஒட்டா
பெருவில் 1982 இல் பிறந்தார். இவர் காட்சிக் கலைஞரும் ஆவார். திரைப்பட இயக்கத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இந்தக் கவிதைகள் The hormone of darkness என்னும் இவருடைய நூலில் இடம்பெற்றவை.

டில்ஷானி சத்துரிக்கா தாபரே
சிங்களத்தில் கலை இலக்கிய விமர்சனங்களைத் தொடர்ச்சியாக எழுதிவரும் டில்ஷானி சத்துரிக்கா தாபரே ஒரு சுயாதீனப் பத்திரிகையாளருமாவார். கொழும்பு பல்கலைக் கழகத்தில் முது கலைமாணி பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.

டோனி பிரஸ்லர்
ககனம் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர். தொடர்ச்சியாக பல்வேறு இதழ்களில் கவிதைகள் எழுதிவருகிறார்.

த.ராஜன்
"பழைய குருடி" சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியரான த.ராஜன், தற்பொழுது பணி நிமித்தமாக சென்னையில் வசிக்கிறார். ‘இந்து தமிழ்’ நாளிதழின் நடுப்பக்க அணியில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். மூன்றாண்டுகள் அந்நாளிதழின் ‘நூல்வெளி’ மற்றும் கலை, இலக்கியப் பக்கங்களுக்குப் பொறுப்பாளராக இருந்தவர்.

தக்ஷிலா ஸ்வர்ணமாலி
சிங்கள இலக்கிய உலகில் சிறுகதை, கவிதை, நாவல் படைப்புகள் வழியாக நன்கு அறியப்பட்டவர். பட்டதாரி ஆசிரியை. சிறுவர் இலக்கியத்திலும் சமூக ஆய்வுகளிலும் ஆர்வம் உள்ளவர். 3 கவிதைத் தொகுப்புகள், 2 சிறுகதைத் தொகுப்புகள், 1 நாவல், 3 சமூக ஆய்வுக் கட்டுரைத்தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன.

தன்ராஜ் மணி
தமிழில் கதை கட்டுரைகள் எழுதி வருகிறார். சாம்பனின் பாடல் என்ற சிறுகதை தொகுப்பு வெளியாகி உள்ளது. அரூவின் அறிவியல் சிறுகதை போட்டியில் இவர் கதை பரிசு வென்றிருக்கிறது. தேசிய விருது பெற்ற “ராக்கெட்ரி” என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.

தருணாதித்தன்
தருணாதித்தன் என்ற புனை பெயரில் எழுதும் ஸ்ரீ கிருஷ்ணன் ஒரு பொறியியல் பட்டதாரி. பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாகவும், பின்னாளில் பன்னாட்டு நிறுவனத்தில் வாகன மென்பொருள் துறையில் பணியாற்றினார். தருணாதித்தனின் முதல் சிறுகதைத் தொகுப்பு “ மாயக்குல்” எழுத்து பிரசுரத்தால் ( ஸீரோ டிகிரி) இப்போது வெளியிடப் பட்டிருக்கிறது.

தர்மு பிரசாத்
பிரான்சில் வசித்துவரும் ‘தர்மு பிரசாத்’ ஆக்காட்டி இதழின் ஆசிரியர். சிறுகதைகள் , விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். இவரின் தொகுக்கப்பட்ட கதைகள் “ஆனைக் கோடாரி” நூலாக வெளியாகியுள்ளது.

தாட்சாயணி
ஈழத்தின் போர்க்காலச் சூழ்நிலையில் முகிழ்ந்த எழுத்தாளர்களில் ஒருவர். யுத்தச் சூழ்நிலையில் வாழ்ந்து அதன் வாழ்வியல் நெருக்கடிகளை இலக்கியமாக்கியிருப்பவர். ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, ‘இளவேனில் மீண்டும் வரும்’, ‘தூரப் போகும் நாரைகள்’, ‘அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ ஆகிய சிறுகதைத்தொகுப்புகளின் ஆசிரியர்.

தாமரை பாரதி
கவிஞர். கவிதை விமர்சகர். தபுதாராவின் புன்னகை (2019), உவர்மணல் சிறுநெருஞ்சி (2021), காசினிக் காடு (2023) ஆகிய மூன்று கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

தாமரைக் கண்ணன்
ஆசிரியர் குறிப்பு : தாமரைக்கண்ணன் ‘ஆனந்த குமாரசாமியின்’ கலை அறிமுக கட்டுரைகளை மொழிபெயர்த்து வருகிறார். அவை சில இணைய இதழ்களில் வெளிவந்துள்ளன. அவிநாசியில் தற்போது வசிக்கிறார். கோவையில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்.

தி.ஜினுராஜ்
சமகாலத்தில் விமர்சனக் கட்டுரைகள், சிறுகதைகள் போன்றவற்றை தீவிரமாக எழுதிக்கொண்டு வருபவர் ஜீனுராஜ். அத்துவ, அழகியல் பார்வையுடன் நீளும் அவரது நவீன இலக்கியத்தின் மீதான மதிப்பீடுகள் இன்னும் நுட்பமாக புனைவுகளை உள்வாங்கிக்கொள்ள வழிசமைத்துக் கொடுப்பவை.
தீபா
பெங்களூரில் வசித்துவரும் தீபா, கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.

தீபு ஹரி
தீபு ஹரி சமகாலத்தில் கவிதைகள், சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருபவர். பொன்முகலி என்ற புனைப்பெயரிலும் எழுதி வருகிறார். இவரது ‘தாழம்பூ’ கவிதைத் தொகுப்பு தனித்து கவனம் பெற்றது.

தூயன்
வரலாற்றையும் கருத்தில்கொண்டு புதிய புனைவு உத்திகள் வழியாக எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள், நாவல்கள் எழுதி வருகிறார். "கதீட்ரல்" என்ற நாவல் மற்றும் "இருமுனை" , "டார்வினின் வால்" ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களின் ஆசிரியர்.

தென்னவன் சந்துரு
வங்கித் துறை ஊழியரான தென்னவன் சந்துரு கலை இலக்கியம் சார்ந்த கட்டுரைகளில் ஈடுபாடுடையவர். மொழிபெயர்ப்பாளர். நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்.

தேவ அபிரா
தேவ அபிரா (Theva Abira) ஈழத்துத் தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். யுத்த காலத்தின் காயங்கள், ஈழத்தின் அரசியல் சூழல், மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "இருள் தின்ற ஈழம்" போன்ற கவிதை நூல்கள் குறிப்பிடத்தக்கவை

தேவகாந்தன்
தேவகாந்தன் ஒரு கவனிப்புக்குரிய ஈழத்து எழுத்தாளராவர். தற்சமயம் கனடாவில் வசித்துவருகிறார். இவர் ‘கனவுச் சிறை’ என்ற நாவலின் மூலமாக தமிழ்ப் பரப்பில் அதீத கவனிப்பைப் பெற்றவர். ஈழத்து தமிழை தன் படைப்புகளில் சிரத்தையுடன் கையாள்பவர். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை ஆகிய துறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.