
தேவதச்சன்
நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி கவிஞர்களில் ஒருவர். 1970களில் 'கசடதபற’ என்ற இலக்கிய பத்திரிகையில் அறிமுகமானார். ஏறத்தாழ அரை நூற்றாண்டாக கவிதைகள் எழுதி வருகிறார். "அவரவர் கை மணல்", "அத்துவான வேளை", "மர்மநபர்" உள்ளிட்ட எட்டு கவிதை தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

ந.சிவநேசன்
சேலம் மாவட்டம், ஆரியபாளையத்தில் வசித்துவரும் ந.சிவநேசன் கவிதைகள், சிறுகதைகள் எழுதுவருகிறார். கானங்களின் மென்சிறை, இதங்களால் நிரம்பியவளின் முத்தச் சக்கரை, மீன்காட்டி விரல், ஃவரைகிறது தேனீ ஆகிய நூல்களின் ஆசிரியர்.

நட்சத்திரன் செவ்விந்தியன்
நட்சத்திரன் செவ்விந்தியன் ‘வசந்தம் 91’, ‘எப்போதாவது ஒருநாள்’ ஆகிய கவிதைத் தொகுப்புகளையும், 'முகாமுகம்' என்கிற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். பல்வேறு பத்திரிகைகள், இணைய இதழ்கள், சஞ்சிகைகளில் இவர் எழுதிய விமர்சனங்கள், குறிப்புகள், அரசியல் கட்டுரைகள் இன்னும் தொகுக்கப்படாமல் விரவிக்கிடக்கின்றன.

நரேன்
சமகாலத்தில் பல்வேறு இதழ்களில் சிறுகதைகளை தொடர்ச்சியாக மொழியாக்கம் செய்துவருகிறார் நரேன். இவரின் முதல் நூல் 'இந்தக் கதையை சரியாகச் சொல்வோம்' மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பு 2020-ல் யாவரும் பதிப்பகம் வெளியீடாக வந்ததுள்ளது.

நவீன் சங்கு
சொந்த ஊர் சிவகங்கை. தற்போது கோவையில் மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார். இலக்கியம் தவிர தத்துவத்திலும், நுண்கலைகளிலும் ஆர்வம் உண்டு.

நிசங்க விஜேமான்ன
சிங்கள சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர். கலை ஆலோசகராக பணியாற்றுகிறார். நகரங்களுக்கு வெளியே வாழ்கின்ற சமூகங்களின் வெவ்வேறு அடுக்குகளையும், வெவ்வேறு காலங்களையும் எழுத்தின் மூலமாக ஆராய்கிறார்.

நிரூபா
நிரூபா கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். ‘சுணைக்கிது’ , ‘இடாவேணி’ ஆகிய சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர்.

நிஷாந்த்
சென்னை பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் முதுகலையில் இரண்டாமாண்டு மாணவராக இருக்கிறார். தொடர்ந்து இணைய இதழ்களில் கட்டுரைகள் எழுதி வருகிறார். அரசியல் தத்துவம், மானுடவியல், உளப்பகுப்பாய்வு ஆகிய துறைகளில் ஆர்வமுடையவர்.

நீலாவணை இந்திரா
கல்முனையைச் சேர்ந்த நீலாவணை இந்திரா கொழும்பில் தற்சமயம் வசித்துவருகிறார். சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

நெகிழன்
கொமாரபாளையத்தைச் சேர்ந்த ‘நெகிழன்’ கவிதைகள் எழுதிவருகிறார். வரைகலை துறையிலும் பரந்த ஆற்றல் கொண்டவர். ‘பூஜ்ய விலாசம்’ என்ற கவிதை தொகுப்பின் ஆசிரியர்.
நெற்கொழுதாசன்
பிரான்சில் புலம்பெயர்ந்து வசித்து வரும் நெற்கொழுதாசன் கவிதைகள், சிறுகதைகள், விமர்சனங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகிறார். ரகசியத்தின் நாக்குகள் என்ற கவிதைத் தொகுதி வெளியாகியிருக்கின்றது.

நோயல் நடேசன்
தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வசித்துவரும் ‘நோயல் நடேசன்’ பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். இவரது ‘அசோகனின் வைத்தியசாலை’ நாவல் தமிழ் இலக்கிய சூழலில் கனவிக்கப்பட வேண்டிய படைப்பாக மதிப்பிடப்படுகிறது.

ப. சரவணன்
முனைவர் ப. சரவணன் (மே 14, 1978) தமிழாசிரியர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பொதுவாசிப்புக்கு உரிய நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாறுகள் போன்றவற்றை எழுதியுள்ளார். இலக்கிய ஆளுமைகளைப் பற்றிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
தமிழ் விக்கியில்

பச்சோந்தி
பச்சோந்தி தமிழ்க் கவிஞர், பத்திரிகையாளர். கணையாழி, வம்சி, ஆனந்த விகடன், நீலம் ஆகிய நிறுவனங்களில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். தற்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்கும் ஜனசக்தி வார இதழில் பணிபுரிந்து வருகிறார். வேர்முளைத்த உலக்கை, கூடுகளில் தொங்கும் அங்காடி, அம்பட்டன் கலயம், பீஃப் கவிதைகள், கபால நகரம் ஆகிய கவிதைத் தொகுப்புகளும் 'பணிநீக்கம் செய்யப்பட்டவனின் நாட்குறிப்புகள்' என்னும் நாட்குறிப்பு நூலும் இதுவரை வெளியாகியுள்ளன.

பவனீதா லோகநாதன்
இலங்கையச் சேர்ந்த சுயாதீன திரைப்பட உருவாக்குனர். இவருடைய By the sea ,Generations ஆகிய குறும்படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கின்றன. Generationsகுறும்படத்திற்கு யாழ்.சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தேசிய குறும்பட விருது கிடைத்திருக்கிறது.Big eyes cinemas என்ற அமைப்பை ஆரம்பித்து சினிமா சார்ந்த களப்பணிகளில் ஈடுபடுகிறார்

பா. அ. ஜயகரன்
பா. அ. ஜயகரன் தமிழில் குறிப்பிடத்தக்க நாடகாசிரியராகவும், நெறியாளராகவும் அறியப்பட்டவர். சிறுகதைகளும் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். இலங்கையில் பிறந்து, புலம்பெயர்ந்து தற்பொழுது ரொரன்டோவில் வசித்து வருகிறார்.

பா.அகிலன்
யாழ்பாணம் நல்லூரைச் சேர்ந்த பா. அகிலன் ஈழத்தின் நவீன கவிதையாளர்களில் ஒருவர். இவரது தொகுப்புகள் பதுங்கு குழி நாட்கள், சரமகவிகள், அம்மை, Then there no witnesses , Tea: concoction of dissonance (collaborative) என்ற தலைப்புகளில் தொகுக்கப்பட்டுள்ளன. யாழ்.பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.

பா.ரேவதி
சிங்கப்பூரில் வசித்துவரும் பா.ரேவதி, கல்வித்துறையில் பணியாற்றி வருகிறார். ஆனந்த விகடன், அவள் விகடன், மங்கையர் மலர் ஆகிய இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். சிங்கப்பூரில் வெளிவரும் 'தி சிராங்கூன் டைம்ஸ்' மாதாந்திர இதழிலும் , நுட்பம் , நீலி ஆகிய மின்னிதழ்களிலும் இவரின் பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தற்சமயம் சிறுகதைகளும் எழுதிவருகிறார்.

பாண்டிச்சேரி தாமரைக்கண்ணன்
புதுச்சேரியில் வசிக்கும் தாமரைக்கண்ணன் தமிழ் இலக்கியம், பண்பாட்டு வரலாறு ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். இவர் எழுதிவரும் “ஆடல்” என்ற கட்டுரைத்தொடர் சிற்பவியல் வழியாக தமிழின் நாட்டார், செவ்வியல் நிகழ்த்துகலைகளை அதன் மூலங்களை ஆராயக்கூடியது. குருகு என்ற கலை-பண்பாட்டு மின்னிதழின் ஆசிரியர்களில் ஒருவர்.

பார்கவி
எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். இணைய இதழ்களில் சிறுகதைகள், விமர்சனக் கட்டுரைகள் எழுதி வருகிறார். ஸ்ரீநிவாஸ் எனும் தன் நண்பருடன் இணைந்து “இம்பர்வாரி செவ்விலக்கிய வட்டம்” என்ற கம்பராமாயண வாசிப்புக் குழுமத்தை நடத்தி வருகிறார். சென்னையில் வழக்கறிஞராக பணிபுரிகிறார்.

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்
பாலசுப்ரமணியன் பொன்ராஜ், புனைவாசிரியர். கட்டுரையாளர். “துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை”, "சீமுர்க்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளின் ஆசிரியர்.

பாலா கருப்பசாமி
கோவில்பட்டியைச் சேர்ந்த பாலா கருப்பசாமி, தற்சமயம் திருநெல்வேலியில் வசித்து வருகிறார். ‘சக்தி நூலகம்’ என்ற நூலகத்தை நடாத்தி வருகிறார். கவிஞர். பத்தி எழுத்து, விமர்சனங்கள் முதலானவற்றிலும் செயற்படுகிறார்.

பாலைவன லாந்தர்
பாலைவன லாந்தர்(நலிஜத்) தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். அநீதிக்கெதிரான குரலாக இவரது கவிதைகள் உள்ளன.

பி.ஏ. கிருஷ்ணன்
பி.ஏ. கிருஷ்ணன் (பிறப்பு: 1946) ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதும் தமிழ் எழுத்தாளர். ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. புலிநகக்கொன்றை, கலங்கிய நதி உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.

பிரசாந்தி சேகரம்
இலங்கையிலிருந்து சிறுவயதில் ஜேர்மனிக்குப் புலம்பெயர்ந்தவர். மொழியியல், இலக்கியம், மானுடவியல், சமூகவியல் போன்றவற்றில் முதுமாணி. ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ் மொழி இலக்கியங்களை தமிழிற்கு மொழிபெயர்ப்பதில் ஆர்வமுடையவர்.

பிரபாகரன் சண்முகநாதன்
“மருள்’ என்கிற தலைப்பில் சிறுகதைகள் தொகுப்பாக யாவரும் பதிப்பகத்தில் வெளிவந்துள்ளது. கலை, இலக்கியம், பண்பாடு மீது ஆர்வம் உண்டு. சிறார் இலக்கியம் விருப்பத்தளம். தற்போது கோவையில் வசிக்கிறார்.

பிரியதர்ஷினி சிவராஜா
சுயாதீன பத்திரிகையார். சரிநிகர், வீரகேசரி, சுடரொளி பத்திரிகைகளில் பணியாற்றியவர். பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள், மனித உரிமைகள், LGBTIQ சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு ஆக்கங்களை எழுதி வரும் இவர் சிங்கள மொழிப்பெயர்ப்புகள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

பிரியம்வதா ராம்குமார்
மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். ஜெயமோகனின் ”அறம்” சிறுகதைத்தொகுப்பை ஆங்கிலத்தில் “stories of true" என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். ஜெயமோகனின் ”வெள்ளையானை” நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொண்டிருக்கிறார்.

பென் ஹெக்ட்
பென் ஹெக்ட் (Ben Hecht) ஓர் அமெரிக்க திரைக்கதையாசிரியர், நாவலாசிரியர், மற்றும் நாடக ஆசிரியர். எழுபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார். The Front Page, 20th Century and Ladies and Gentlemen போன்ற நாடகங்கள், Eric Dorn, The Florentine Dagger போன்ற நாவல்கள், மற்றும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார்.

பெரு விஷ்ணுகுமார்
ழ என்ற பாதையில் நடப்பவன்’ கவிதைத்தொகுப்பின் ஆசிரியர். கவிதைகளும், சிறுகதைகளும் சமகாலத்தில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார்