எழுத்தாளர்கள்

பெருமாள்முருகன்

பெருமாள்முருகன், பேராசிரியர், தமிழ் எழுத்தாளர், ஆய்வறிஞர், கவிஞர். ஒடுக்கப்பட்ட எளிய மனிதர்களின் வாழ்நிலையை, குறிப்பாக பதின்பருவத்தினரின் உலகை 'ஏறுவெயில்', 'கூளமாதாரி' போன்ற புனைவுகளில் சித்தரித்தார். படைப்புகளில் கொங்கு வட்டாரத்தன்மை குறித்த பார்வைக்கு அழுத்தம் கொடுத்து, அதிகம் அறியப்படாதிருந்த கொங்கு வேளாண் வாழ்க்கையைப் பதிவு செய்தவராகவும் மதிப்பிடப்படுகிறார்.

தமிழ் விக்கியில்

ப்ரவின் துளசி

சிறுகதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். பிரஞ்சு மொழியிலிருந்து நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் செய்து வருகிறார். "ஒரு நாத்திகனின் பிரார்த்தனை"  நூலில் ஆசிரியர்.

மணி எம். கே. மணி

சென்னையில் வசித்துவரும் மணி எம். கே. மணி, திரைப்பட துறையில் பணியாற்றிவருகிறார்.  திரைப்படங்கள் பற்றி ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார்.  ‘ஆஷஸ் & டைமண்ட்ஸ், மதுர விசாரம், மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம்’ ஆகிய புனைவு நூல்கள் உற்பட பல கட்டுரை நூல்களும் எழுதியுள்ளார்.

மதார்

மதார் (முழுப்பெயர்: சா. முகமது மதார் முகைதீன், பிறப்பு: ஏப்ரல் 14, 1993) நவீனத் தமிழ் கவிஞர். அரசியல் தீவிரம், மனிதர்களின் துயரம், கசப்பு ஆகியவற்றிலிருந்து விலகி குழந்தைகளின் கள்ளமின்மை நோக்கி தன் கவிதைகளை விரித்தவர்.

தமிழ் விக்கியில்

மதிஅழகன்

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு அச்சம்பட்டி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். சென்னையில் பணிபுரிகிறார். எதிர் வெளியீடு பதிப்பகம் மூலமாக 2023-ம் ஆண்டு "ரோல்ஸ்ராய்ஸும் கண்ணகியும்" என்ற முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளார்.

மதுமிதா

கோவையை சேர்ந்த நாடகக் கலைஞர் மற்றும் கட்டுரையாளர்.  உதவிப் பேராசிரியராகப் பணி புரிந்து வருகிறார். நாடகங்கள் குறித்தான விமர்சனங்கள், கோட்பாடுகள், ஆளுமைகள் குறித்து தொடர்ந்து எழுதி வருகிறார். புகிரி அரங்காட்டத்தில் நாடகக் கலைஞராகவும். நிகர் கலைக்கூடத்தில் நாடகக் கலைஞர் மற்றும் நிகழ்த்துக் கலைஞராக செயல்பட்டு வருகிறார்.

மனோஜ் பாலசுப்பிரமணியம்

மனோஜ் பாலசுப்பிரமணியன். ஊர் தேனி. பொறியியல் பணி. ஆர்வம் - இலக்கிய வாசகர். மதம், வரலாறு சார்ந்தவற்றில் ஆர்வமும் தேடலும் கொண்டவர்

மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் ஜி சின்னப்பன், பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் என்ற நாவலின் ஆசிரியர். சமகாலத்தில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார். இவரது ‘நூறு ரூபிள்கள்’ என்ற சிறுகதைத் தொகுதி பரவலான கவனத்தைப் பெற்றது. கூர்ந்த வாசிப்புக்குரிய படைப்பாளியாக மதிப்பிடப்படுகிறார்.

மாஜிதா

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், ஓட்டமாவடி எனும் கிராமத்தில் பிறந்து கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம்பெற்று சட்டத்தரணியாக பணியாற்றிய  எழுத்தாளர் மாஜிதா தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறார். சிறுகதை எழுத்தாளர், பர்தா நாவலின் ஆசிரியர்.

மு.குலசேகரன்

முழுப்பெயர் மு. குலசேகரபாண்டியன். திருப்பத்தூர் மாவட்டம், பாலாற்றங்கரையோரமுள்ள, பாபனபள்ளி பிறந்து வளர்ந்த ஊர். வாணியம்பாடி அருகிலுள்ள புதூரில் வசிக்கிறார். 'ஒரு பிடி மண்', 'ஆயிரம் தலைமுறைகளைத் தாண்டி' (உயிர்மைப் பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. 'அருகில் வந்த கடல்', 'புலி உலவும் தடம்' (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. “உற்ற சொல்லைத் தேடி” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற கட்டுரைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. “தங்க நகைப் பாதை” (காலச்சுவடு பதிப்பக வெளியீடு) என்ற நாவல் வெளியாகியுள்ளது.

முத்துராசா குமார்

மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகேயுள்ள தென்கரை கிராமத்தில் பிறந்து தற்சமயம்  சென்னையில் வசிக்கிறார். . அச்சு மற்றும் இணைய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எழுதிவருகிறார் . இதுவரை 'பிடிமண்' (2019), 'நீர்ச்சுழி' (2020), ‘கழுமரம்’ (2023) ஆகிய கவிதைத் தொகுப்புகளையும் 'ஈத்து' (2021) என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

மெலிஞ்சி முத்தன்

மெலிஞ்சிமுத்தன் தற்சமயம் கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். பிரண்டையாறு, அத்தாங்கு, வேருலகு, உடக்கு ஆகிய புனைவு நூல்களின் ஆசிரியர்.

யவனிகா ஸ்ரீராம்

கவிஞர். விமர்சகர்."இரவு என்பது உறங்க அல்ல","திருடர்களின் சந்தை","காலத்தில் வராதவன்" முதலிய நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் ஒரு தனித்துவமான கவிதைக் குரலாக கருதப்படுகிறார்.

யுவன் சந்திரசேகர்

தமிழ் எழுத்தாளர், கவிஞர். பின்நவீனத்துவ அழகியல் கூறுகளைகொண்டு எழுதிய முக்கியமான படைப்பாளி. எம்.யுவன் என்ற பெயரில் கவிதை எழுதினார். மாற்றுமெய்மை என யுவன் சந்திரசேகர் வரையறை செய்யும் ஒருவகை மாய யதார்த்தத்தை அவருடைய படைப்புகள் வெளிப்படுத்துகின்றன.

தமிழ்விக்கியில்

ரதன்

ரொரொன்டோவில் வாழ்கிறார். அரசியல், சமூக செயற்பாட்டாளர். ஒளி தேடும் நிழல்கள், எதிர் சினிமா ஆகிய நூல்களின் ஆசிரியர்.

ரமேஷ் பிரேதன்

'ரமேஷ் பிரேதன் தமிழில் எழுதிவரும்  முக்கியமான மீபுனைவு எழுத்தாளர்களில் ஒருவர். பின்நவீனத்துவ படைப்பிலக்கியவாதியாகவும் விமர்சகராகவும் அறியப்படுகிறார். இருபது ஆண்டுகளாக கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள், விமர்சனக்கட்டுரைகள் என பல்வேறு தளங்களில் எழுதியுள்ளார்.

ரவிச்சந்திரன் எம்

கவிஞர். கவிதைகள், கவிதைகள் பற்றிய கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். சிறுபத்திரிக்கை ஆசிரியர். கோவை மாவட்டம், போத்தனூரில் வசிக்கிறார். கணக்கு தணிக்கையாளராக பணியாற்றுகிறார்.

நூல்கள்:

1.மெய்நிகர்(கவிதைகள்)-லயம் வெளியீடு

2.கவிதையின் மெய்மை (கவிதைபற்றிய மொழிபெயர்ப்பு கட்டுரைகள்)- தமிழினி வெளியீடு

ரா.கிரிதரன்

“காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை” என்ற சிறுகதை தொகுப்பு, காற்றோவியம் என்ற கட்டுரைத் தொகுப்பு ஆகியவற்றின் ஆசிரியர். வளர்ந்தது புதுச்சேரியில். தற்சமயம் லண்டனில் வசிக்கிறார்.

ராஜன் ஆத்தியப்பன்

வல்லன்குமாரன்விளையைச் சேர்ந்த கவிஞர் ராஜன் ஆத்தியப்பன் கடைசியில் வருபவன், கருவிகளின் ஞாயிறு என்ற சிறுகதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். மலையாளத்திலிருந்து தமிழுக்கு கவிதைகளை மொழியாக்கமும் செய்துவருகிறார்

ராம்பிரசாந்த்

ராம்பிரசாந்த். மொழியியலில் முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். மதுரை அருகேயுள்ள பேரையூரில் வசித்து வருகிறார். இசை, இலக்கியம் இரண்டிலும் ஆர்வமுண்டு.

ரே பிராட்பரி

ரே பிராட்பரி (1920-2012): அமெரிக்காவின் பிரபல புனைகதை எழுத்தாளர். ஏறக்குறைய 600 சிறுகதைகள், ஏராளமான கவிதைகள், கட்டுரைகள், திரைக்கதைகள், நாடகங்கள் எழுதியுள்ளார். இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு ‘டார்க் கார்னிவல்’ 1947-ல் வெளிவந்தது. 1950-களில் இவரது பல கதைகள் ‘ஈ.சி. காமிக்ஸ்’ நிறுவனத்தால் படக்கதைகளாக வெளியிடப்பட்டன.

‘எ சவுண்ட் ஆஃப் தண்டர்’, ‘தி வெல்ட்’, ‘ஆல் சம்மர் டே’ ஆகிய சிறுகதைகள் பிரபலமானவை. 1953-ல் வெளியான இவரது ‘ஃபாரன்ஹீட் 451’ புதினம் உலகப்புகழ் பெற்றது. ‘தி மார்ஷியன் குரோனிகல்ஸ்’, ‘தி இல்லஸ்ட்ரேட்டட் மேன்’, ‘சம்திங் விக்கட் திஸ் வே கம்ஸ்’ ஆகியவையும் குறிப்பிடத்தக்க படைப்புகள்.

இவரது பல கதைகள் திரைப்படங்களாக, தொலைக்காட்சிப் படங்களாக, தொடர்களாகத் தயாரிக்கப்பட்டு மேலும் புகழ்பெற்றன. செவ்வாய் கிரகத்தில் அமெரிக்காவின் கியூரியாசிட்டி ரோவர் வாகனம் தரையிறங்கிய இடத்துக்கு ‘பிராட்பரி லேண்டிங்’ என்று இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

றாம் சந்தோஷ் வடார்க்காடு

றாம் சந்தோஷ் (றாம் சந்தோஷ் வடார்க்காடு, இயற்பெயர் :சண்முக. விமல் குமார்) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ந்து எழுதி வருகிறார்.

தமிழ் விக்கி 

லக்ஷ்மி பிரியா

தமிழ்நாடு, திருச்சியைச் சேர்ந்தவர். போஸ்ட்மார்னிச, மினிமலிஸ சிந்தனைகளில் ஆர்வமுள்ளவர். புத்தகங்கள் மீது தீரா விருப்பம் உள்ள எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்.

லக்ஷ்மி மணிவண்ணன்

லக்ஷ்மி மணிவண்ணன் (அ.மணிவண்ணன்) (லட்சுமி மணிவண்ணன்) (நவம்பர் 23, 1969) தமிழில் கவிதைகளும் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளும் அரசியல் சமூக விமர்சனங்களும் எழுதிவரும் எழுத்தாளர். கன்யாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

தமிழ் விக்கியில்

லதா அருணாச்சலம்

‘உடலாடும் நதி’ என்ற கவிதை தொகுப்பு, தீக்கொன்றை மலரும் பருவம் என்ற மொழிபெயர்ப்பு நூல்களின் ஆசிரியர். தொடர்ச்சியாக மொழிபெயர்ப்பு துறையில் ஈடுபட்டு வருகிறார்.

லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன், அறிதலின் தீ, நீர்கோல வாழ்வை நச்சி, இரவைப் பருகும் பறவை, புறாக்களை எனக்குப் படிப்பதில்லை புத்தகங்களின் ஆசிரியர். கவிதைகள் சிறுகதைகள் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். சிற்றில் இலக்கிய குழுமத்தின் முதன்மை ஒருங்கிணைப்பாளர்.

லாஸ்லோ கிராஸ்னாஹோர்காய் (László Krasznahorkai)

லாஸ்லோ கிராஸ்னஹோர்கை (László Krasznahorkai) ஹங்கேரிய நவீன இலக்கியத்தின்  பிரதானமான எழுத்தாளர்.  மனித வாழ்வின் ஏமாற்றம், தனிமை மற்றும் ஆன்மீக வீழ்ச்சி போன்றவை இவரது படைப்புலகின் முக்கிய பேசுபொருள். 2024ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசுபெற்றவர்.

முக்கியப் படைப்புகள்:

  • சாத்தான்தாங்கோ(Satantango - 1985): சிதைந்துபோகும் கிராமத்தையும், மனிதர்களின் கூட்டான ஏமாற்றத்தையும் பேசும் புகழ்பெற்ற நாவல்.
  • தி ரெசிஸ்டன்ஸ் ஆஃப் மெலன்கோலி(The Resistance of Melancholy - 1989): ஒரு விசித்திரமான சர்க்கஸ் குழுவின் வருகையால் ஒரு நகரத்தில் ஏற்படும் ஒழுங்கின்மையை விவரிக்கும் கதை.
லோகமாதேவி

தாவரவியல் பேராசிரியர், கட்டுரையாளர். அரிஸோனா பல்கலைக்கழக வலைத்தளத்தில் அறிவியல் தகவல்களை தமிழில் மொழிமாற்றம் செய்யும் பணியில் உள்ளார்.  தொடர்ந்து தாவரவியல் சார்ந்த தமிழ் கட்டுரைகளை மின்னிதழ்களில் எழுதி வருகிறார். தமிழ் விக்கி

லோகேஷ் ரகுராமன்

லோகேஷ் ரகுராமன் திருவாரூர் மாவட்டதைச் சேர்ந்தவர். "விஷ்ணு வந்தார்","அரோமா" ஆகிய  சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். இணைய இதழ்களில் தொடர்ச்சியாக சிறுகதைகள் எழுதிவருகிறார்.

தமிழ் விக்கியில்

வ.அதியமான்

திருவண்ணாமலை அருகேயுள்ள வந்தவாசியில் வசித்து வருகிறார். குடைக்காவல் எனும் முதல் கவிதை தொகுப்பு சால்ட் பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. இலக்கிய இதழ்களில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார்.

Go toTop