எழுத்தாளர்கள்

வி.துலாஞ்சனன்

மட்டகளப்பில் வசித்துவரும் எழுத்தாளர் துலாஞ்சனன், இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018),  ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலை தனது திருமண சிறப்புமலராககவும் (2021) வெளியிட்டுள்ளார். வரலாற்று பார்வையில் ஆய்வுரீதியான பண்பாட்டுசார் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவருகிறார்.

வி.துலாஞ்சன்

மட்டக்களப்பில் வசித்துவரும் துலாஞ்சன், இலங்கை சைவநெறிக்கழக வெளியீடான ‘அலகிலா ஆடல்: சைவத்தின் கதை’ எனும் சைவ வரலாற்று நூலையும் (2018),  ‘மட்டக்களப்பு எட்டுப் பகுதி’ நூலை (2021) தனது திருமண சிறப்புமலராகவும் வெளியிட்டுள்ளார்.

விஜய ராவணன்

திருநெல்வேலியைச் சேர்ந்த விஜய ராவணன் தற்சமயம் சென்னையில் வசித்துவருகிறார். ‘சால்ட்’ வெளியீடாக வெளிவந்திருக்கும் ‘நிழற்காடு’ இவரின் முதல் சிறுகதைத்தொகுப்பாகும்

விஜயகுமார்

வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  தற்போது டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் (Institute of Science, Tokyo) ஆய்வாளராக உள்ளார். நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர். தமிழிலிருந்து மலையாளத்துக்கு கவிதைகள் மொழிபெயர்த்துள்ளார்.

விஜய் ரெங்கராஜன்

விஜய் ரெங்கராஜன், இணைய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வரும் எழுத்தாளர். அமெரிக்கா கலிபோர்னியா வளைகுடா பகுதியில், கணினி பார்வை - செயற்கை நுண்ணறிவு துறையில் ஆராய்ச்சியாளராக பணிபுரிகிறார்.

வினையன்

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் வினையன். பணி நிமித்தமாகச் சென்னையில் வசிக்கிறார். மருதம் கலைக்குழுவை நடத்தும் இவர், தொல்லிசை மீதான ஈர்ப்பில் இசைக் கருவிகளையும் சேகரித்து வருகிறார். மணல்வீடு வெளியீடாக 2016ல் வந்த 'எறவானம்' இவரது முதல் கவிதை நூல். 2022ல் நீலம் வெளியீடாக இரண்டாவது கவிதை நூல் 'எச்சிக்கொள்ளி' வந்தது.

விப்புலி நிரோஷினி ஹெட்டியாரச்சி

கவிஞர், சிறுவர் எழுத்தாளர், சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் சமூக ஆர்வலரும் ஆவார். இதுவரையில் ரு காவ்யா - ரூபாவலியா, சண்டகா, சகுந்தலாவாங்கே சூல காவ்யா, மற்றும் நிக்மனகா நிமித்தக் ஆகிய கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன.

விவேக்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலக்கியம் மற்றும் தத்துவத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறார்.

விவேக் சுப்ரமணியன்

அமெரிக்காவின் Spillwords தளத்தில் விவேக் சுப்ரமணியத்தின் ஐந்து கதைகள் பிரசுரமாகியுள்ளன. தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவியல் கதைகளும் கட்டுரைகளும் தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

விஷால் ராஜா

சென்னையைச் சேர்ந்த ‘விஷால் ராஜா’ புனைகதைகள், விமர்சன திறனாய்வு தளங்களில் தொடர்ச்சியாக இயங்கிவருகிறார். "திருவருட்செல்வி" சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில்

வீ.செ.செந்தில்குமார்

சென்னையை சேர்ந்த வழக்கறிஞரான செந்தில்குமார் கட்டுரையாசிரியர். வரலாறு, குற்றவியல் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளவர். பயணங்களில் தீரா விருப்பம் கொண்டவர், பயணக் கட்டுரைகளும் எழுதுகிறார்.

வெற்றிராஜா

புதுச்சேரியைச் சேர்ந்த வெற்றிராஜா தற்சமயம் இங்கிலாந்தில் வசித்துவருகிறார். மதிப்புரைகள், விமர்சனம், புனைவுகள், அல்புனைவுகள் என்று பரந்த தளத்தில் எழுதிவருகிறார்.

வே.நி.சூர்யா

கவிதைகள், மொழியாக்கங்களில் தொடர்ச்சியாக இயங்கிவரும் வே.நி.சூர்யா, கரப்பானியம், அந்தியில் திகழ்வது என்ற இரண்டு கவிதை தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

வேணு தயாநிதி

வேணு தயாநிதி இலக்கியத்திலும், இசையிலும் அதிகம் நாட்டம் கொண்டவர். தற்சமயம் அமெரிக்காவில் வசித்துவருகிறார்.  புற்றுநோய் மூலக்கூறு உயிரியலில் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் கொண்டவர்

வைதேகி நரேந்திரன்

இலக்கிய வாசிப்பிலும், வாசிப்பு அனுபவத்தைப் பகிர்வதிலும் தொடர்ச்சியான ஈடுபாடு உள்ளவர். ஐக்கிய நாடுகள், அபிவிருத்தித் திட்ட அலுவலராக கிளிநொச்சியில் பணியாற்றுகிறார்.

வைரவன் லெ.ரா

வைரவன் லெ.ரா நாகர்கோயிலைச் சேர்ந்த எழுத்தாளர். தமிழில் சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். தற்போது பெங்களூரில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வருகிறார்.

தமிழ் விக்கியில் 

ஷங்கர்ராமசுப்ரமணியன், தமிழில் எழுதிவரும் கவிஞர், விமர்சகர். ‘இகவடை பரவடை, நிழல் அம்மா, ஆயிரம் சந்தோ‌ஷ இலைகள், கல் முதலை ஆமைகள் முதலிய கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. பிறக்கும்தோறும் கவிதை, நான் பிறந்த கவிதை, நினைவின் குற்றவாளி  ஆகிய கட்டுரைத் தொகுப்புகளையும்  எழுதியுள்ளார். விக்ரமாதித்யன் கவிதைகள் ,‘அருவம் உருவம்: நகுலன் 100’ உள்ளிட்ட தொகுப்பு நூல்களின் ஆசிரியர்.

தமிழ் விக்கியில் 

ஷமீலா யூசுப் அலி

‘ஷமீலா யூசுப் அலி’ தற்சமயம் இங்கிலாந்தில் வசிக்கிறார். கவிதைகள், ஓவியங்களில் ஈடுபாடு கொண்டவர். FemAsia இணைய இதழின் ஆசிரியர்.

ஸினா அக/ Zena Agha

பாலஸ்தீன- ஈராக்கிய எழுத்தாளர் மற்றும் கவிஞர். போர் வாழ்க்கை மற்றும் புலம்பெயர்வுகளை ஆராயும் அவருடைய படைப்புக்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தற்போது நியூயோர்க்கில் வசிக்கிறார்.

ஸ்டாலின் ராஜாங்கம்

ஸ்டாலின்ராஜாங்கம் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். ஆணவக்கொலைகளின் காலம், எழுதாக்கிளவி, வாழும் பௌத்தம், பெயரழிந்த வரலாறு போன்ற முக்கியமான ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். தலித் இயக்கங்களின் வரலாறு, முந்தையகால தலித் செயற்பாட்டாளர்களின் நூல்களை மறுபதிப்பு செய்தல் என்று தொடங்கிய ஸ்டாலின் ராஜாங்கத்தின் அறிவுச் செயல்பாடுகள் இன்று பொது வரலாற்றுத் தளத்தை பாதிக்கவும் கேள்விக்கு உட்படுத்தவும் செய்கின்றன. தமிழகத்தின் முதன்மை ஆய்வாளர்களில் ஒருவர்.

ஸ்யாம்
ஸ்ரீதர் நாராயணன்

ஸ்ரீதர் நாராயணன் . அம்மாவின் மதில்கள், கத்திக்காரன் என்ற சிறுகதை புத்தகங்களின் ஆசிரியர். நேர்காணல்கள், புத்தக விமர்சனங்கள் போன்றவற்றிலும் ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார். பழந்தமிழ் இலக்கியங்களில் அதிக விருப்பும் ஈடுபாடும் கொண்டவர்.

ஸ்ரீநிவாச கோபாலன்

ஶ்ரீநிவாச கோபாலன் பதிப்பாளர். ‘அழிசி’ (Azhisi eBooks) என்ற மின்னூல் பதிப்பகத்தை தொடங்கி நடத்திவருகிறார். நாட்டுடைமையான நூல்களையும் அச்சில் இல்லாத முக்கியமான நூல்களையும் தேடிக் கண்டடைந்து மின்புத்தகமாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

ஸ்ரீஷங்கர்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிறந்தவர். "பொயட்ரி" சிறுபத்திரிகையின் ஆசிரியர். தொலைவற்ற கடலின் குரல், திருமார்புவல்லி, துறைமுகங்களின் நகரம் என மூன்று கவிதைத் தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன.

ஸ்வேதா மயூரி

பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிகிறார். உலக செவ்விலக்கியங்கள் மற்றும் வரலாறு மீது ஆர்வம் கொண்டவர். சிறுகதைகள் கட்டுரைகள் எழுதிவருகிறார். மொழிபெயர்ப்புகளிலும் ஈடுபாடுள்ளவர்.

ஹரால்ட் ப்ளூம்

தலைசிறந்த இலக்கிய விமர்சகர். ஐரோப்பிய–அமெரிக்க இலக்கியவாதிகளில் ஒருவர். அவருடைய இலக்கிய மதிப்பீடுகள் பல்வேறு தரப்பினரால் தொடர்ச்சியாக விவாதிக்கப்படுகிறன.

ஹெர்மன் ஹெஸ்ஸே

ஹெர்மன் ஹெஸ்ஸே, ஜெர்மனியைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், கவிஞர். அவர் அடசன் நாவலைப்பற்றி எழுதியிருக்கும் இக்குறிப்பில் இளவரசர் மிஷ்கின் கிறிஸ்துவுடன் ஒப்பிடப்படுவதைப்பற்றி விவரிக்கிறார். அத்துடன் மிஷ்கினின் மாயா சிந்தனை முறை பற்றியும், பிற அனைவரிடமிருந்து அது எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் பற்றியும் தன் நுட்பமான அவதானங்களை முன்வைக்கிறார். அதிலிருந்து நம் ஆன்மீக விடுதலைக்கான வழிமுறையையும் சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்துவை புனிதராக்குவதில் உள்ள தந்திரத்தை சுட்டிக்காட்டி அவரை அனார்கிஸ்ட் என்று வரையறுத்து அதன் வழியே மிஷ்கின் மேல் புதிய வாசிப்பை முன்வைக்கிறார்

Go toTop