அகழ் அறிவிப்பு : சென்னை புத்தகக் கண்காட்சி சிறப்புப் பதிவுகள்


சென்னை புத்தகக் கண்காட்சி தமிழ்நாட்டின் முக்கியமான கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று. இந்நாட்களிலேயே புத்தகங்கள் பற்றிய பேச்சு பரவலாக ஒலிக்கும். எழுத்தாளர்களும் வாசகர்களும் தங்களை ஒரு கூட்டு சமூகமாக உணரும் இடங்களில் ஒன்று புத்தகக் கண்காட்சி. அதன் வழியாகவே நவீன இலக்கியம் இன்று சிறிதளவாவது வாசகர்களை கண்டடைந்துள்ளது.

இவ்வருடம் ஜனவரி 8 முதல் 21 வரை, சென்னையில் புத்தகக் காட்சி நடைபெறவுள்ளது. அதையொட்டி அகழ் இணையதளத்தில் பதினோரு எழுத்தாளர்களிடம் அவர்களுடைய புதிய நூல்கள் சார்ந்து உரையாடல்களை முன்னெடுத்து வெளியிடவுள்ளோம். சக எழுத்தாளர்களே இவற்றை மேற்கொள்கிறார்கள்.

ஜனவரி 5 முதல் 16 வரை தினமும் ஓர் உரையாடல் வெளிவரும்.

அகழ் ஆசிரியர் குழு


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

கடந்தவை

Go toTop