அகழ் இணையக் கூடுகை – 04 : “மம்மர் அறுக்கும் மருந்து”

“பன்முகப்பட்ட சிந்தனைக் குரல்கள் எந்த தணிக்கையும் இல்லாமல் சுதந்திரமாக உரையாடுவதும் முரண்பட்டு விவாதிப்பதுமே ஆரோக்கியமான ஒரு அறிவுச் சூழலுக்கான சான்றுகள். உரையாடலே உயிர்த்தன்மை என்றும் சொல்லலாம்.”

கடந்த முறை அகழ் சார்பில் முன்னெடுக்கப்பட்ட “மலை என மாரி என” இணையக் கூடுகை சிறப்பான முறையில் நடைபெற்றது. கவிஞர் இசையின் கட்டுரைத்தொடர் குறித்து கவிஞர் கார்த்திகா முகுந்த் சிறப்பான உரையாற்றினார். கவிஞர் இசை ஏற்புரை வழங்கி, பின்னர் வாசகர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.

அகழின் அடுத்த இணையக் கூடுகை, நவம்பர் 14, 2026 அன்று திட்டமிடப்பட்டுள்ளது. இம்முறை எழுத்தாளர் பெருமாள்முருகன் கலந்துக் கொள்கிறார். உயர்கல்வித்துறை குறித்து பெருமாள்முருகன் தொடர்ந்து எழுதி வருகிறார். கல்வித்துறை அனுபவங்கள்வழி வெவ்வேறு காலக்கட்டங்களில் அவர் எழுதியவை “மயிர்தான் பிரச்சினையா?, காதல் சரி என்றால் சாதி தப்பு, மனதில் நிற்கும் மாணவர்கள்” என்றும் தலைப்பில் நூல்வடிவம் பெற்றுள்ளன. இவை மட்டுமின்றி தம் மாணவர்களின் அனுபவங்களை வெளிக்கொணரும்விதமாக “சாதியும் நானும்” என்னும் நூலுக்கு பதிப்பாசிரியராகவும் இருந்துள்ளார். அகழ் இணையதளத்தில் உயர்கல்வித்துறை குறித்த நேர்காணலில் தன் அனுபவங்கள்வழி இருபத்தொரு வாரங்களுக்கு விரிவான பதிலளித்திருந்தார். அந்நேர்காணல் மீதான வாசிப்பாக இந்நிகழ்வு நடைபெறும்.

“மம்மர் அறுக்கும் மருந்து” – பெருமாள்முருகன் நேர்காணல்

இன்னும் இரு தினங்களில் “மம்மர் அறுக்கும் மருந்து” நூலாகவும் , அவரின் பதிப்பாசிரியத்துவத்தில் “பிடிக்காத ஆசிரியர்” என்னும் நூலும் வெளிவர இருக்கிறது. நிகழ்வின் சிறப்பாக, “மம்மர் அறுக்கும் மருந்து” குறித்து கல்வித்துறையிலிருந்து இருவர் உரையாற்றுகின்றனர். முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பிரேம்குமார் அறிமுக உரையும், எழுத்தாளர் ஆர். சிவகுமார் சிறப்புரையும் வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு அனைவரின் பங்கேற்பையும் ஆதரவையும் கோருகிறோம். முன்கூட்டியே கேள்விகள் அனுப்ப விரும்புவோர் akazhonline@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம். நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்களும், விரும்பினால் கேள்விகளை மட்டும் அனுப்பி வைக்கலாம்.

நாள் : 14 நவம்பர் 2026
நேரம் : மாலை 4:00 – 6:00

கூகிள் மீட் விவரங்கள் விரைவில் தளத்தில் பகிரப்படும்.

அகழ் ஆசிரியர் குழு

000


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

1 Comment உரையாடலுக்கு

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop