
அகழ் இணையதளத்தில் உயர்கல்வித்துறை குறித்த நேர்காணலில் தன் அனுபவங்கள்வழி இருபத்தொரு வாரங்களுக்கு விரிவான பதிலளித்திருந்தார் எழுத்தாளர் பெருமாள்முருகன். அந்நேர்காணல் மீதான வாசிப்பாக எழுத்தாளர் ஆர். சிவகுமார், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பிரேம்குமார் கலந்துக் கொள்ளும் அகழின் அடுத்த இணையக் கூடுகை, நவம்பர் 14, 2026 அன்று திட்டமிடப்பட்டிருந்தது. சில தவிர்க்க இயலாத காரணங்களால் நிகழ்வு ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
இந்நிகழ்வு விரைவில் நடைபெறும்.
“மம்மர் அறுக்கும் மருந்து” – பெருமாள்முருகன் நேர்காணல்
இந்த நிகழ்ச்சிக்கு அனைவரின் பங்கேற்பையும் ஆதரவையும் கோருகிறோம். முன்கூட்டியே கேள்விகள் அனுப்ப விரும்புவோர் akazhonline@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பலாம். நிகழ்வில் பங்கேற்க இயலாதவர்களும், விரும்பினால் கேள்விகளை மட்டும் அனுப்பி வைக்கலாம்.
நாள், கூகிள் மீட் விவரங்கள் விரைவில் தளத்தில் பகிரப்படும்.
அகழ் ஆசிரியர் குழு

அகழ்
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.
