வானிலிருந்து : சாரா அபு ரஷீத்

தமிழில் : சிவராஜ் பாரதி

நான் இறந்தால்
என்னை வானத்தில் புதைத்துவிடுங்கள்
யாரும் அதற்காகச் சண்டையிடப் போவதில்லை.

காலி வெடிகுண்டுகளைக் கொண்டு
குழந்தைகள் கால்பந்து விளையாடுகிறார்கள்.
(வானிலிருந்து என்னால் அவர்களைப் பார்க்க முடிகிறது)

ஒரு பாட்டி ஈத் பண்டிகைக்கான
பலகாரங்களைச்* செய்துகொண்டிருக்கிறார்.
(வானிலிருந்து என்னால் அதைச் சுவைக்க முடிகிறது)

இளசுகள் ஆரஞ்ச் மரத்தடியில் அமர்ந்து
காதல் கடிதங்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
(வானிலிருந்து என்னால் அதைப் படிக்க முடிகிறது)

இராணுவத்தினர் சோதனைச் சாவடியில்
புதிய துப்பாக்கிகளைப் பரிசோதித்துக்கொண்டிருக்கின்றனர்.
(வானிலிருந்து என்னால் அதைக் கேட்க முடிகிறது)

தாக்குதல்களுக்கிடையே மரணமும் தண்ணீரும்
சமையலறையில் நொதித்துக்கொண்டிருக்கின்றன.
(வானிலிருந்து என்னால் அதை முகர முடிகிறது.)

நான் இறந்தால், என்னை வானத்தில் புதைத்துவிடுங்கள்.
இப்போதைக்கு –
சொந்தம் கொண்டாடியோ உரிமை கோரியோ யாரும் அங்கே வர மாட்டார்கள்.

000

* மூலத்தில் makroota and mamoul என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. makroota – பேரீச்சம் பழம், பாதாம் உள்ளிட்டவற்றைக் கொண்டு செய்யப்படும் இனிப்புப் பலகாரம்; mamoul – பேரீச்சம் பழ பிஸ்கட்.


000

From the Sky

By Sara Abou Rashed

When I die,
bury me in the sky—
no one is fighting over it.

Children are playing soccer
with empty bomb shells
(from the sky I can see them).

A grandmother is baking
her Eid makroota and mamoul
(from the sky I can taste them).

Teens are writing love letters
under an orange tree
(from the sky I can read them).

Soldiers are cocking new rifles
at the checkpoint
(from the sky I can hear them).

Under fire, death and water
are brewing in the kitchen
(from the sky I can smell them!).

When I die, bury me in the sky,
I said, for now, it is quiet—
no one owns it and no one is claiming to.

சாரா அபு ரஷீத்

உரையாடலுக்கு

Your email address will not be published.