பனிக் கொட்டுகிறது
இறுதிச் சடங்குகள் வந்தபடி உள்ளன
ஒரு நகரை நெருங்குகையில்
போக்குவரத்து அறிகுறிகள் வந்தபடி இருப்பது போல
நீண்ட நிழல்களின் பூமியை
ஆயிரக்கணக்கான மக்கள் வெறித்து பார்க்கிறார்கள்
ஒரு பாலம் தானே உருவாகிறது
மெதுவாக
நேரே அந்தர வெளியில்
தாமஸ் டிரான்ஸ்டிரோமர் (1931-2015)
OOO
குளிர்காலத் தனிமை
குளிர்காலத் தனிமை-
ஒற்றை நிறம் மட்டுமான உலகில்
காற்றின் ஓசை
பாஷோ(1644-1694)
OOO
குளிர்கால மரங்கள்
அணி சூடுவது மற்றும்
அணிக் களைவதன் எல்லா சிக்கலான நுணுக்கங்களும் முடிவடைந்துவிட்டன
ஒரு திரவ நிலவு
நீண்ட கிளைகளினூடே இதமாய் நகர்கிறது
ஒரு நிச்சயமான பனிக்காலத்துக்கு எதிராக
தங்கள் மொட்டுக்களை தயாரித்துவிட்டு
அந்த ஞான மரங்கள்
குளிரில் நின்று துயில்கின்றன
வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் (1883-1963)
OOO
தீபா
பெங்களூரில் வசித்துவரும் தீபா, கவிதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்வதில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்.