நம்முடே ஹிருதயங்களில் எப்போழும் நிலைநிக்குன்ன
சில அலங்கார வளவுகள் ஈ ஜீவிதம்

அலங்கார வளைவு
ஆடல்பாடல் ஆட்டம் பாட்டம்
உள்ளே உறியடி
மதியமே மழுடித்தல்
நள்ளிரவு பம்பையில்
பூங்கரகம் புறப்பாடு
மேலே முழுநிலவு
கிடாவெட்டு கறிவிருந்து
சாமி புறப்பாடு தேர் ஊர்வலம்
சாதிசனம் கொஞ்சம் சரக்கு
கரகாட்டம் ஒயிலாட்டம்
தப்பு,மேள தாளம்
முதல் மரியாதை
சண்டை சச்சரவு
தாம்புக்கயிறு தாலிச்சரடு
முறுக்கு மீசை
பாட்டன் பூட்டன் காலம்
சம்பிரதாயம் சடங்கு
ஓங்குதாங்கான மனுஷி
பகட்டான ஆடை எச்சில் இலை
தீபாரதனை பெருங்கூட்டம்
அச்சு அசலான சகோதரிகள்
கோலாட்டம் மயிலாட்டம்
கந்தகம்,பீடி சுருட்டு நாற்றம்
கறிக்குழம்பு ,ஊதுபத்தி, சாம்பிராணி
முல்லை சாமந்தி வாசனை
கல்லாங்குத்து பாறைக்குள் ஒதுங்கல்
விடிய விடிய கொண்டாட்டம்
புருஷன் பொஞ்சாதி பிரிவு
மக்களின் இன்ப துன்பம்
பெருந்தலைவர் காமராசர்
தந்தைபெரியார்
அறிஞர் அண்ணா
டாக்டர் கலைஞர்
புரட்சித்தலைவர்
புரட்சித் தலைவி
ஆகியோர் நல்வரவு
கண் கலிக்கம்
மூக்கு நசியம்
காது செவியம்
சித்த அரசியல்
அருள் மருந்திடல்.
ஆயுதபூஜை தீபாவளி பொங்கல்
திருவண்ணாமலை தீபம்
அய்யப்ப மாலை
சித்திரைத் திருவிழா
கரைமேல் அழகர்
வேளாங்கண்ணி மாதாகோவில்
கொடியேற்றம் தேர்பவனி
மக்கள் கூட்டம்
ஜாமாத்துல் ஆகர் மாதம்
புனித ஷாகுல் அமீது நினைவுதினம்
நாகூர் தர்காவில் கொடியேற்றம்
கந்தூரிவிழா கோலாகலம்
ஓணம் யுகாதி
நிஃப்டி சென்செக்ஸ்
சாதா செக்ஸ் செஸ்
பள்ளி கல்லூரி விடுமுறை
பத்து நாட்கள் உல்லாசச் சுற்றுலா
ஊட்டி கொடைக்கானல் டூர்
ஹம்பி ஹளபேடு சென்னகேசுவரர்
மைசூர் அரண்மனை
புட்டபர்த்திசாய்பாபா
திருப்பதி தேவஸ்தானம் குருவாயூர்
திருச்சூர் வடக்குநாதர் அனந்தராமன்
நெல்லையப்பர் மதுரை மீனாட்சி,
ஸ்ரீரங்கநாதர் தரிசனம்
விடுப்பில் நண்பர்களுடன்
கடற்கரை ஆற்றங்கரை ஏரிக்கரை
பீர் பிராந்தி விஸ்கி
அறம்செய்ய விரும்பு
நேருமாமா இறந்தார்
இந்திராகாந்தி அம்மையார் படுகொலை
சஞ்சய்காந்தி அகால மரணம்
இராஜீவ்காந்தி படுகொலை
பழைய தினத்தந்தி செய்தியில்
காஞ்சி பெரியவா முக்தி அடைகிறார்
கிருபானந்தவாரியார் மரணம் அடைகிறார்
போன்ட்ஸி தோட்டம்
சந்திராசுவாமிகள்
சுப்ரமணிய சுவாமி
சந்திரசேகர் பிரதமரானார்
விஸ்வநாத் பிரதாப் சிங்
தேவிலால் ஜனதாதளம்
ராமகிருஷ்ண ஹெக்டே
வி.சி.சுக்லா வீடு
மாதவ்ராவ் சிந்தியா
அத்வானி ரதயாத்திரை
மணந்தால் மாகாதேவன்
இல்லையேல் மரணதேவன்
மலர்கொடுத்தேன்
கைகுலுங்க வளையலிட்டேன்
ரத்தத்தின் ரத்தங்களே
என் உயிரினும் மேலான
அன்பு உடன்பிறப்புகளே
தட் ஈஸ் சுபாரா
பெல்ஸ் பேண்ட்
நெத்தைகுண்டு கபடி
கோட்டிப்புல் மாண்டா
மந்தார இலை வாழைத்தடுக்கு
கிண்ணி பழஞ்சோறு கூழ்
சோவியத் பலகணி
யுனஸ்கோ கூரியர்
மிகைல் கோர்பச்சேவ்
ஜாவீத் மியாண்டட்
இம்ரான்,வாசிம் அக்ரம்
கடவுளின் கை
மாரடோனா
ஸ்டெபிகிராப்
லெனின் கிராட்
தஸ்தாயேவ்ஸ்கி டால்ஸ்டாய்
மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி
சட்டமேதை அம்பேத்கர்
அதீன் பந்தோபாத்யாய
சம்ஸ்காரா கல்கத்தா
ரூபாய்க்கு மூன்றுபடி லட்சியம்
ஒருபடி நிச்சயம்
சின்னம்மையா? முதலில்
தெரிவிப்பவருக்கு ஆயிரம்
ரூபாய் இனாம்
பசுவும் கன்றும்
ஏர் உழவன்
டிரான்ஸ் சைபீரியன் டிரெயின்
ஹவுரா பாலம்
பிஜூ பட்நாயக் ஜே பி பட்நாயக்
தி.மு.க அ.தி.மு.க
நடிகை மாதுரியின் முலை
விருந்து சரோஜா தேவி
ஒப்பணக்கார வீதியிலே
ஒரு கொலை புஷ்பா தங்கதுரை
இன்னொரு செருப்பு எங்கே
தமிழ்வாணன்
நந்தினி 440 வோல்ட்ஸ்
பரத் சுசிலா
சோபன்பாபுவிடம் போய்க் கேள்
விஷ்ணுபுரத்தில் விஷ்ணு
புரண்டு படுத்தார்
இப்படம் இன்றே கடைசி
துப்பறியும் சாம்பு
மூன்று பைசா
ஆலம்ஆரா பதேர் பாஞ்சாலி
கிராகாம் கூச் டிரிபிள் செஞ்சுரி
கத்தார் கேரி காஸ்ப்பரோவ்
இசை இளையராஜா
பாடல்கள் வாலி
படம் சகலகலா வல்லவன்
அம்பிகா ராதா மோகமுள்
சாமான்கள்
தி.ஜா,லா.ச.ரா
தலித் எழில்மலை
மேல பேர் நல்லாயிருக்குல்ல
ம்ம்ம்…
ஏஞ்சலின் லிடியா ஷாலினி
பேரும் நல்லாயிருக்கு
வை.கோபால்சாமி கிரேக்க இலக்கியம்
லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்
ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ்
நம்மவா சொந்தங்களே பங்காளி
தியான்மென் சதுக்கம் ஜிடேன்
ரைட் மேன் இன் தி ராங் பார்ட்டி
சத்தியவாணி முத்து
கல்வி அமைச்சர் அரங்கநாயகம்
ஜருகண்டி ஜருகண்டி
என்.டி.ராமாராவ்
கொண்டபள்ளி சீதாராமய்யா
நெல்லூர் பெண்
ரோமில் இருக்கும் போது
ரோமானியனாக இரு
படுக்க வர்றயா
ஙோத்தா பாடு
யார கூப்ட்ட…
வீட்ல யாருமில்ல
வர்றயா?
சரி வர்றேன்…
பாத்து வா..
கே.எஸ் காண்டம்
அய்யய்யோ கிழிஞ்சிடுத்தா?
சங்கருக்கு கதவற்ற வீடு
நிமித்தம்
முருக பக்தர்
ஷஷ்டி கவசம்
இடும்பன் பூஜை
பிராந்தி படையல்
பிரண்டை மாவளி
ஓடை சமாதி
நடுத்தெரு பீடை தூமை
வைக்கோல் போர் புற்கட்டு
வாழ்நாளுக்கும் கெட்ட பேர்
போப் ஜான் பால்
இந்திய வருகை
விக்டோரியா மாகாராணி
நடுக்கடலிலும் நாய்க்கு
நக்குதண்ணிதான்
சார்லஸ் டயானா
குஷ்வந்சிங் பக்ரித் பண்டிகை
பாய் பிரியாணி கடை
கிருஸ்துமஸ்
சித்தம் கலங்கல்
கைவிட்டது திருடியது
மாட்டிக்கொண்டது
மனஅழுத்த மாத்திரை
உன்கவிதையை நீ எழுது
க.நா.சு,புதுமைப்பித்தன் பிரமிள்
நகுலன் பசுவய்யா சிறுகதை,நாவல் கவிதை
கொடுங்கோல் அரசு
நெடுங்காலம் நில்லாது
விமர்சனம் இலக்கியக் கூட்டம்
இப்படம் இன்றே கடைசி
ஆம் டீச்சர் நேற்றிரவு உங்களை நினைத்துதான்
கரம் புனைந்தேன் என்றவர்
தமிழ் பண்டிட்
காஷ்மீர் பண்டிட்டுகள்
கொஞ்சம் பேர்
காஷ்மீரில் இல்லை
தாவி நதியில்
தாவி அரண்மனையின் அரசி
நேருவைப் பார்க்கும்
கண்களில்
அவ்வளவு அழகும்
கொஞ்சம் களவும்
உள்ளதாக நினைத்தேன்
பிந்த்ரன் வாலா
அமிர்த்சரஸ்
ஜாலியன் வாலாபாக்
சைவ உணவகம்
பஞ்சாபி தாபா
லூலூ மால்
90’ s கிட்ஸ்
அய்யய்யோ நாங்க
பியூர் வெஜிடேரியன்
இப்பல்லாம் யாருங்க ஜாதி
பாக்குறாங்க
சொல்லுங்க ப்ரோ
இவளுக்கு
அவன் கிரஷ்
இவன் பெஸ்டி
அதோ அவன் லவ்வர்
இவர் வீட்டுக்காரர்
கார் வச்சிருக்கார்
வாட்ஸ் அப் கால் பண்ணு
ஜாதி சங்க குரூப் முக்கியம்
இன்பாக்ஸ் லவ்வர்
புருஷன் நானிருக்கசொல்ல
எவனோட பேசிட்டே இருக்க?
டைவோர்ஸ் ஆயிடுத்து
கொத்து பரோட்டா
சால்னா
நடுவிரல்
தாடேபள்ளிக்கூடம்
சுந்தரபாண்டியபுரம்
அனிருத் தனுஷ் சுசித்ரா
மார்டன் தியேட்டர்
கஞ்சா அபின்
சூத்தடித்தல்
புள்ளிங்கோ
திருமதி முல்லா நஸ்ருதீன்
இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை
யுஎஸ் விசா
பங்கு ஊர்ல இருக்கியா?
ஏஐ
மச்சி லூஸ்ல விடு
எங்க…தியேட்டர்லயா
பார்லயா
சுமிதா ஆண்ட்டிக்கூட பீச்ல
இப்ப என்ன பிரச்சன உனக்கு
புரியல
இன்ஸ்டா லவ்
ரீல்ஸ்,யு டியூப் டான்ஸ்
மட்டன் பிரியாணி ஷவர்மா
இருப்பது
அமைதி கொள்வது
எழுதாமல் இருப்பது
வேடிக்கை பார்ப்பது
கடன் கேளாதிருப்பது
கடனாளியாகயிருப்பது
BeeGees Statin Alive
யாரும் நமக்கு வாழ்க்கைப்
பாடமெடுக்க விடாதிருப்பது
கை வசம் கவிதை இல்லை
டிக்கெட் நீங்களே எடுத்திடுங்க
டிவி சுந்தரம் அய்யங்கார்
உதவி செய்வது
யான்னி
Into the deep blue
மகராஜபுரம் சந்தானம்
திருவையாறு வளையப்பட்டி
ஐ லைனர் ஐ புரோ பென்சில்
மஸ்காரா பேஷியல் மெஹந்தி
சீரம் ஸ்டேஃபிரி
நிக்காம போயிட்டேயிருக்குடி
சரி பே பண்ணிடுங்க
அப்புறம் பார்க்கலாம் போதும்
இல்லை சரி மேலும்
இன்னபிற
பிறகுவருகிறேன் டாட்.

கண்டராதித்தன்
நவீன தமிழ் கவிஞர்களில் மரபோடு சார்ந்த கவிதைளை எழுதும் கவிஞர். இவருடைய கவிதைகள் பெரும்பாலும் பக்தி மரபுகளையும் தொன்மங்களையும் சார்ந்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் மரபின் பண்பாட்டுச் சித்திரங்கள் ஊடுருவும் கவிதை வெளி இவருடையது என்று கவிதைச்சூழலில் கருதப்படுகிறது.
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.





















நீங்கள் உங்கள் நிகழ்கால கடந்த கால வரலாற்றைச் சொற்களால் கடக்க முடியும் .அவ் வரலாற்றுக்குள் மீண்டும் பயணிக்க இலக்கிய வடிவங்களின் வெளிப்பாடு எப்போதும் துணையிருக்கும் .ஒரு கால கட்டத்தின் நிகழ்வுகளை அறிய, அதில் பயணிக்க ஒரு விரிவான உரைநடை (கதை,கட்டுரை )உதவலாம். ஏனெனில் உரைநடை தனக்கே உரித்தான ஆய்வுப் பின்புலத்தையும் ,தரவுச்சேகரங்களையும் கள விசாரணையும் கொண்டு விலாவரியான பார்வையில் வாசகனை உள்ளிழுக்கலாம்.
ஆனால் அதனைக் கவிதை ஒரே சொல்லில் கூட செய்துவிடும் .
அப்படித்தான் இங்கே கண்டராதித்தனின் கவிதையில்
ஒரு சொல் அல்லது இரண்டு சொற்கள் ஒரு நிகழ்வை,அது உருவான சூழல் ,அது ஏற்படுத்திய சமூக பொருளாதார பண்பாட்டுத் தாக்கங்கள் ,அச்சொல் உருவாக்கிய தற்காலிக மற்றும் நிரந்தர பொதுக் கருத்துருவாக்கங்கள் ,மற்றும் அவற்றை மறந்து போன குடிமைச் சமூகங்களின் மற்றமைகளின் மீதான தற்காலிகப் பற்று,அனைத்தையும் கடந்து போதல் போன்றவற்றை மிக எளிதாகச் சொல்கின்றன.
கவிதை எழுதுதல் முறையிலும் சொல்லல் முறையிலும் பரிசோதனை இது.ஒரு ஐம்பதாண்டு கால வாழ்வை முன்னும் பின்னும் பயணித்துப் பார்க்கக் கூடிய கவிதை என இதன் உள்ளடக்கத்தைச் (Content) சொல்லலாம் .
எல்லாமும் கலந்ததுதான் இக்கவிதை.
இதன் வடிவம் ஒரு புதிய வடிவம் (New Form) .கட்டமைப்பும் கூட கன கச்சிதமானது (Structure).எல்லாவற்றையும் விட எல்லா வடிவங்களிலும் கண்டராதித்தனது சந்தம் (Rhythmic Language ) மெருகேறும் மொழி வாசகனை இக்கவிதைக்குள் இழுத்துவிடும் .இழுத்துத் தசாப்தங்களின் நிகழ்வுகளில் முன்னும் பின்னுமாய்த் தாவி தாவி நிச்சயமாகப் பயணிக்கச் செய்யும் .
அனைத்தையும் விட அழகான கவித்துவமான தலைப்பு .
நல்லதொரு கவிதானுபவத்தைத் தந்நமைக்கு நன்றி கண்டராதித்தன்.
தாமரைபாரதி
14.07.2025
விக்ரமாதித்யன் அண்ணாச்சி, நவபாஷாணம் வழியாக, நீள்கவிதை வடிவத்தில் சந்தம் லயம் தமிழ் பேச்சின் தாளத்தோடு சமகால தமிழ்வாழ்க்கையை நவீன கவிதையில் சாதித்தார், சென்ற நூற்றாண்டின் கடைசிப் பகுதியில். அதற்கு முன்னர் சோதனை முயற்சியாக சி. மணியின் ‘வரும் போகும்’, வெற்றிகரமான குறுங்காவியமான கலாப்ரியாவின் சுயம்வரம் படைப்பையும் நாம் நினைவுகூர வேண்டும். சந்தத்தையும் நீக்கி நவீன தமிழ் நினைவு மற்றும் வரலாற்றின் வரைபடம் ஒன்றை உருவாக்கியுள்ளார் கண்டராதித்தன்.
நிகழ்காலத்திலிருந்து கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பது அரிதாகிவிட்டது இன்று.
காரணம் நிகழ்காலமானது மாயையையாய் ஒருவித கட்டமைப்பை ( Build) நிகழ்த்தி நம்மை சிறைகொள்கிறது. அதனாலேயே கனவுகள் அரிதாகிவிட்டன. கற்பனைகள் முடக்கம் கண்டுவிட்டன.
கடந்த காலத்தை நோக்கித் திரும்புவதோ அல்லது எதிர்காலத்தை நோக்கி பாய முனைவதோ தான் முறையே கனவு கற்பனை இவற்றின் சிறகுகள். அவ்விதமே எழுத்துக்கள் பிரவகிக்கின்றன. இலக்கியம் செழுமை கொள்கிறது.
வெற்றுச் சூழல்கள் ஆட்கொண்டுவிட்ட நிகழில் எல்லாமே உப்புச் சப்பில்லாததாக
மாறிப்போயின.
இலக்கியமானது தப்பிப் பிறக்கும் பருவம் போலாகிவிட்டது. ரயில் பயணம்போல நிலைகொள்ளாக் காட்சிகள் தாம் மனதில் புரண்டோடுகின்றன. அக்காட்சியிலிருந்து ஒரு கவிதை மீண்டெழுவதென்பது தகிடதத்தம் தான்.
கண்டராதித்தன் அவர்கள் இக்கவிதையின் மூலம் அரிதானதொரு பெயர்வை மீட்சியை கவிதைக்குத் தந்திருக்கிறார்.
கவிதையை உள் கூர்ந்து வாசிக்க வாசிக்க கவிஞர் கைகொண்ட வானங்கள் வாசகனுக்குள்ளும் பரந்து விரிகின்றன.
மேலும்
சூழல்களின் கட்டுடைப்பில் மகத்தானதொரு வெற்றியையும் கண்டடைந்திருக்கிறார் கவிஞர்.
– சுஜய் ரகு
நிகழ்காலத்தில் எல்லாமே நிகழ்கிறது,,
வாழ்வின் மீது படர்ந்துள்ள கோலத்தை, ஆயிரத்தெட்டு புள்ளிவைத்து வரைந்த கவிதையில், எல்லாமே மாயம் என்கிற தொனியும், இதுவும் கடந்துபோகும் என்கிற நம்பிக்கையும் கவிதையின் தொனியில் அடங்கியுள்ளது.
கவிஞன் கால பெட்டகத்தை முழுங்கிவிட்டான்.
-ஜெயானந்தன்