உடலிலிருந்து இருப்புக்கு

Alberto Giacometti. Man Pointing. 1947

சமீபத்தில் என்னுடைய உறவினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாமல் போனது. காலில் தீராத வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.  தொடர் சிகிச்சையினால் நீண்டநாள் படுக்கையில் இருக்க வேண்டிய சூழல். நடமாட்டம் குன்றி, தன் அன்றாட செயலோட்டம் தடை பட்ட நிலையில் தன்னிலை குலைந்து ஒரு கட்டத்தில் அவருக்கு மனநலம் பாதித்து விட்டது. நோய்க்காலத்தின் இயல்பான சோர்வல்ல. நேரடியான மனப் பிறழ்வு. இன்று மனநல மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்.   கால் வலிக்கு சிகிச்சை எடுக்காமல் இருந்திருந்தாலும் நடமாட்டம் இழந்து அவர் இதே நிலைக்கு வந்திருக்கக்கூடும். இப்போது நோய் குணமாக்கப்பட்டும் அதே நிலையை எட்டியிருக்கிறார். இந்த வினோதத்தினை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.  

உடல் ஆரோக்கியத்தை சமநிலைக்கு கொண்டு வர தொடரப்பட்ட சிகிச்சை, எப்படி ஒரு மனிதனை மனநல பாதிப்புக்கு உள்ளாக்கியது? மருத்துவர்கள் எந்த தவறும் செய்யவில்லை. உலக அளவில் பலருக்கும் நிரூபிக்கப்பட்ட, மருத்துவ சிகிச்சையையினையே அவர்கள் பின்பற்றினார்கள் . அது ஏன் இவரின் மனநலத்தை பாதித்தது என்ற கேள்விக்கு அவர்களிடம் பதில் இல்லை . எத்தனையோ பேர் நோய்வாய்ப்படும்போது மனச் சோர்வடைந்து பின்னர் மீண்டு வருகிறார்கள். சிலருக்கோ அதே சோர்வு பிறழ்வாக மாறுகிறது. அப்படியென்றால் எல்லா உடல்களும் பௌதீகமாக ஒரே போல இருந்தாலும், ஒன்றல்ல போலும். இத்தகைய சம்பவங்களே மனிதனுக்கும், உடலுக்கும், மன நலத்திற்கும் இடைப்பட்ட உள்ளார்ந்த தொடர்பை நினைவுறுத்துகின்றன. மனிதனுடைய இருத்தலை பரிசீலிக்க வைக்கின்றன. 

இருத்தலியல்வாதம் இந்த கேள்வியினை, மனித இருப்பின் நிலையினை, வினோதத்தினை வலியுறுத்துகிறது. பிளாட்டோ (plato) வில் தொடங்கி, பின்வந்த டெக்கார்த்தே (descarte) போன்ற தத்துவ அறிஞர்கள் வரையிலும் பெரும்பாலானோர் , மனிதனை, இந்த பூமியில் உள்ள மற்ற பருப்பொருட்களை போல எண்கணிதம், வடிவவியல் மற்றும் பௌதிக அறிவியல் விதிகளை கொண்டு பகுத்தறிய முடியும் என்றே கருதினர். இவ்வாறு மனிதனை , புறவயமாக கணக்கிட்டு,   , மாறாத பொருளாக, பகுத்து அறியும் தன்மையானது அவனை பகுத்தறியும் விலங்கு என்று வகைப்படுத்தும் முடிவு நோக்கி கொண்டு சென்றது. ஆனால் மனிதனின் இருத்தல் சார்ந்த உறுதியான கவலைகளை, இந்த புறவயமான காரணங்களை மட்டும் வைத்து புரிந்து கொள்ள முடிகிறதா? இல்லை. ஏனெனில் சுய உணர்வு மிக்க மனிதன் சமாதானத்தில் இல்லை.

இருத்தலியல்வாதத்தின்படி மனிதன் எந்நிலையிலும் தன் இருத்தலை, நிச்சயமின்மை மற்றும் சந்தேகத்துடன் அணுகி, மரணம் சார்ந்த பதற்றத்தில் இருக்கிறான். அதனாலேயே ஒருபோதும் மனித நிலையை, பற்றற்று, புறவயமாக அறிந்துகொள்ள முடியாது. மனித இருத்தலின் கணங்கள், உணர்வுகளாலும், மனநிலைகளாலும், உறுதியான தேர்வுகள் மற்றும் செயல்களாலும்  தீர்மானிக்கப்படுகின்றன. எனவே மனிதனை பகுத்தறியும் விலங்கு என்பதை விட பாதிப்புக்கு உள்ளாகும், அல்லது உணரும் விலங்கு என்று வரையறுப்பதே சரியாக இருக்கமுடியும். நெருக்கமான நண்பரையோ அல்லது உறவையே துர் மரணத்தால் இழந்த பின் பகுத்தறிவிடம் நாம் தோற்றுப்போவது இந்த இடத்தில் தான். என் உறவினருக்கு நடந்ததும் இதுவாக இருக்கலாம். நவீன மருத்துவத்தினால் மரணத்தை ஒத்திப் போட முடியும். ஆனால் மரணத்தின் பதற்றத்தை என்ன செய்வது?

தன் உடலால் ஆன மனிதன், இந்த பூமியில் உள்ள மற்ற பொருட்களை போல ஒரு நிலையான இருப்போ பொருளோ (object/substance) அல்ல. விலங்குகள் மற்றும் செடிகளை போல மனிதனுக்கு முன் தீர்மானிக்கப்பட்ட சாரம் என ஏதும் இல்லை. ஒரு பூச்செடியோ இரைகொல்லி விலங்கோ தோன்றிய காலம் முதல் இன்று வரை அதற்கு விதிக்கப்பட்ட சாரத்தில் இருந்து விலகியதில்லை. இவை எதுவுமே திடீரென்று ஒரு நாள் “நான் யார்?” என்று கேட்டுப் பார்ப்பதில்லை. அதனாலேயே மனிதனுக்கு சாரம் இல்லை. அவனுடைய இருப்பு சாரத்திற்கு முன் வருவது (existence precedes essence). அவன் இந்த பூமியில் பிறந்து இங்குள்ள சூழலுக்கேற்ப தன்னை வடிவமைத்துக்கொண்டே, உருவாகிக்கொண்டே இருப்பவன். 

மனிதன் என்பவன் அருவமான மனமா? அல்லது உருவமான உடலா? எனும் கேள்வி பல நூற்றாண்டுகளாக இருந்து வருகிறது.  கிரேக்க காலகட்டத்தை சேர்ந்த தத்துவவாதிகள் மனிதனின் இருப்பை காரண அறிவின் மூலம் அறிய முடியும் என்றே வகுத்தனர். அதுவே மேற்கத்திய சிந்தனை மரபின் அடிப்படையாக இருந்தது. புலனறிவு உணர்த்தும் உடல் அறிதலின் எல்லைகளை கடந்து, தர்க்க பூர்வமாக காரண அறிவின் மூலம்  உயர்ந்த சிந்தனையால் (high altitude thinking and reasoning) அடையப்படும் ஒரு மேலான நிலையை கொண்டே மனிதனின் இருப்பை அறிந்து கொள்ள முடியும். உருவமான உடலின் எல்லைகளை அதற்கு தடை. எனவே அவற்றை கடக்க வேண்டும் என்பது அவர்களின் கூற்று. இன்று இது அனைவரின் ஏற்பையும் பெற்ற கருத்து அல்ல. இருத்தலியல் வாதம் உட்பட்ட நவீன சிந்தனைகள் முன்வைக்கும் உடல் என்பது, ஒரு சரீர சொரூபம்; நாம் இந்த உடலால் ஆட்பட்டு உள்ளோம் ; உலகத்தால் சூழப்பட்டுள்ளோம்; இங்கு, இப்பொழுது இருந்து கொண்டிருக்கிறோம் இவ்வகை உணர்தலை  ஒட்டு மொத்தமாகவோ அல்லது  பகுதிகளாகவோ அறிவதன் வழியே நம் இருப்புக்கு அர்த்தம் உண்டாகிறது. 

புலன்களால் ஆன உடலை விடுத்து புறவயமாக காரண அறிவை மட்டும் கொண்டு இந்த உலகத்தை நம்மால் அறிய முடியாது.   எந்த உன்னத நிலையையும் உடல் மூலமாக உணர்ந்து அறிந்துகொள்கிற உண்மையில் இருந்து பிரித்து உணர முடியாது.  நிலத்தடி ஊற்றை படுகையிலிருந்து பிரித்தறிய முடியாததைப் போல. இந்த பிரபஞ்சம் தனித்தனியாக புலன்களால் உணரப்பட்டு, பின்னர் மன செயல்முறையால் ஒன்றிணைக்க படுவதில்லை. இவை அனைத்தும் இங்கு திகழும் ஒட்டுமொத்த, ஒருங்கிணைந்த ஒன்றின் பகுதியே, அதை உணர உடலே மனிதனுக்கு இருக்கும் ஒரே மூர்த்தம்.

இந்த சொரூபம் என்பது பாலினத்தின் அடிப்படையிலானது; உடலின் சாத்தியக்கூறுகள் சார்ந்தது; சுபாவத்தை ஒட்டியது; வளரும் சூழலை பொறுத்து மாறுபடுவது; இவை அனைத்தும்   இழையோடுகிற உலகுடனான உறவுடன் அமைத்தே கட்டமைக்கப்படுகிறது. உடல் இந்த உலகுடன் கொண்டுள்ள உறவு, சமூக சூழல் சார்ந்து இருக்கிறது என்பதால் தான் உடலூனமுற்றோர், மாற்றுப் பாலினத்தோர் , கறுப்பின மக்கள், காலனியாதிக்கத்தால் அடிமை ஆக்கப்பட்டோர் என எல்லோரும்  உலகத்தை ஒரே விதமாக உணர்வதில்லை. தத்தம் சூழலை பொறுத்து வேறுவேறாக அணுகுகிறார்கள்.இது நான் கொண்டுள்ள உடல் அல்ல. உடலே நான்.

உடல் அது ஆட்பட்டுள்ள சூழலுடன் அமைத்தே மனிதனின் சுயம் உருவாகிறது. சுயம் என்பது  ஒரு தொடர் உருவாக்கநிலை; நிகழ்தலேயன்றி ஓர் இருப்பு அல்ல. இந்த நிகழ்தல் சாத்தியமே மனிதனுக்கு காலத்தை உருவாக்கும் வாய்ப்பை கொடுக்கிறது. காலம் என்பது மனிதனுக்கு கொடுக்கப்பட்டுள்ள ஒன்று அல்ல, அது அவனில் நிகழ்வது (flow).  மனிதன் கடந்த காலத்தில் எறியப்படுகிறான். உண்மை சூழ்நிலையை எதிர்கொள்ளும் பொருட்டு தன் சுயாதீன முடிவுகளால் எதிர்காலத்தை கணிக்கிறான். எதிர்காலத்தை நோக்கி செயல் ஆற்றும் பொருட்டே கடந்த காலத்தை தன்னுடன் எடுத்து முன்செல்கிறான். இந்த நிகழ்வு ஒரு எல்லைக்கோட்டை வகுத்து மனிதனை செயலாற்றல் கொள்ள வைக்கிறது. இந்த நிகழ்தலில் ஏற்படும் சிதைவு (rupture) மனித இருத்தலை கேள்விக்குள்ளாக்குகிறது. கேள்விக்கான பதிலை அர்த்தப்படுத்தும் வகையில் ஒரு செயலை மனிதன் சுயாதீனமாக தெரிவு செய்யும் ஒரு வாய்ப்பு இருக்கும்பொழுது  அந்த சுயஉருவாக்கம் தடைபடுவதில்லை. இல்லையெனில் அது நிலைகுலைந்து போகிறது. அனைவருக்கும் தான் ஏதோ ஒன்றாக ஆகமுடியாத ஒரு கூறுதான் பதற்றத்தை அளிக்கிறதே ஒழிய, தான் உருவாகி வந்திருக்கும் நிலை அல்ல.

நவீன மருத்துவத்தின் கொடையால், இன்று ஒரு சராசரி மனிதனின் ஆயுட்காலம் முன் எப்பொழுதையும் விட நீடிக்கப்பட்டுள்ளது . மனிதனை, அவனது உடலை அறிவியல் பூர்வமாக பிரித்து அறியும் எண்ணற்ற கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சிக்கலாக விவாதிக்கப்பட்டு வரும் மன ஆரோக்கியம் (mental health) பற்றிய உரையாடல்களில் பெருவாரியாக மருத்துவ துறை இன்றும் மனிதனை மூளையின் இயக்கத்தால் இயங்கும் உடலாகவும், அவன் எதிர்கொள்ளும் சிக்கல்களை உடலுறுப்புகளுடனும் தொடர்புபடுத்தி சிகிச்சை அளிக்க முற்படுகிறது. அதில்முன்னேற்றங்களையும் அடைந்துள்ளது. ஆனால் மனிதனுக்கு பொது சாரம் என்று ஒன்று இல்லாத பொழுது, ஒவ்வொருவரையும் பாதிப்புக்குள்ளாக்கும் காரணம் அவர் சூழலில் வைத்தே உணர்ந்து கொள்ளப்படும் போது, அனைவருக்கும் பொதுவானதாக பரிந்துரைக்கப்படும் சிகிச்சை முறை, மன ஆரோக்கியத்திற்கு இட்டுச்செல்லுமா?

இன்று பலவித சூழலில் வாழும் மனிதர் அனைவரும் எதிர்கொள்ளும் உளச்சோர்விற்கு (boredom), அவரவர் நோக்கம் எண்ணி செயலாற்றும் செயல்களை முன்னெடுக்கும் சூழல் அமையப்பெற்றுள்ளதா என்பதை கணக்கில் கொள்ளாமல், பொதுவான காரணியாக வேலைப்பளுவினால் உண்டாகும் மன அழுத்தம் (stress) அல்லது தூக்கமின்மையை வலியுறுத்தி அளிக்கப்படும் சில மருந்துகளும், உடல்சார் பயிற்சிகளும், முகம் தெரியாத சிகிச்சையாளரிடம் மனம் விட்டு உரையாடுவதும் மட்டுமே தீர்வாக அமையுமா? மனிதனின் இருப்பு பற்றிய ஆதார கேள்விகளுக்கு பதில் அறிய முற்பட்ட ஒரு தத்துவ பிரிவு இன்று மனிதனின் ஆயுளை நீட்டிக்கவைத்த மருத்துவத்துறையில் என்ன பங்கை ஆற்றிக் கொண்டிருக்கிறது என்பதை வைத்தே அதன் இன்றைய பயனையும், பங்களிப்பையும் அறிந்துகொள்ள முடியும். மனிதனுக்கான மறுவாழ்வை மருத்துவம் மட்டுமே வழங்கமுடியுமா, அல்லது தத்துவத்துறையின் ஊடுருவலும் தேவையா?

விவேக்

பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இலக்கியம் மற்றும் தத்துவத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறார்.


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments உரையாடலுக்கு

  1. I think you might like this book – “இருத்தலியல் – Existentialism (Tamil Edition)” by selvaraj raman.

    Start reading it for free: https://read.amazon.in/kp/kshare?asin=B0C57CLT4F&id=vxk3tucm2bfofnrkki6ehjljvm

    Excerpts from the book

    இப்போது எல்லாம் எங்கள் வீட்டில் ‘சிட்டுக்குருவி’ கூண்டு கட்டுவது இல்லை. அதைப் பார்த்து பல வருடங்கள் ஆகிறது. எங்கள் குழந்தை வளர்ந்தது குருவிகளையும், காக்கைகளையும், மைனாக்களையும் பார்த்து ,பழகி விளையாடுவதே என்று நினைக்கும் போது ஒரு பெரிய ‘இறுக்கம்’ இப்போது என் மனதை நிலை குழையச் செய்கிறது. “ஆமாம் எங்கள் வீட்டின் முன்புறமும், பின்புறமும் ‘இரண்டு ‘ பெரிய அலைபேசி கோபுரங்கள் அலங்கரிக்கின்றன” எங்களை மகிழ்வித்த பறவைகளே ! – நீங்கள் உண்ண , உறங்க , உறவாடச் சென்ற இடம் பற்றி கொஞ்சம் சொல்லுங்கள். நாங்களும் அங்கே வரத் தயாராகி விட்டோம். ஒரு திருத்தம்- உங்கள் உறைவிடத்தில் நிலை கொள்வது எங்கள் நோக்கம் அல்ல, இந்த நிலை இல்லா வாழ்க்கையில் இருக்கும் போதே ‘இறந்து கொண்டு இருப்பதை விட, உங்கள் இறைச்சல் இறைத்தன்மை வாய்ந்தது ; அந்த சுவாசத்தை ,சுகத்தைகொஞ்சம் பகிர எங்களிடம் வந்து செல்லுங்கள்.

  2. I think you might like this book – “SELF IS SUPREME. !!! : TRANSCENDING SELF IS BLISSFUL !!!” by Selvaraj raman.

    Start reading it for free: https://read.amazon.in/kp/kshare?asin=B0FMQ81N9R&id=ubro5ce7pvewpgyqye5yikeji4

    Excerpts from the book

    My self is supreme… Thou self is Brahman… Transcending Self is Blissful. It happens when one is going through ” unconditional consciousness” vis a vis “conditioned consciousness ” which is a state of sleep. But unconditioned consciousness is in being, in allowing, in observing, in feeling , in caring, in showing compassion, in helping . Albeit without regrets and expectations leading Dharmic way of life and doing with what we have and still going deep into inner core of self.

  3. QI think you might like this book – “Philosophy of Existence : Exitensialism explained” by Selvaraj Raman.

    Start reading it for free: https://read.amazon.in/kp/kshare?asin=B0DY6SGS8M&id=tyzy4nm7mraqthex4iwyxx4yn4

    Excerpts from the book

    That Is What Define Us… You can’t create life based on your thoughts. But one is certain for sure i.e we have to nurture good thoughts out of ordinary and follow them naturally. Why I am telling all these things is that we hardly follow or seldom miss out the uniqueness of our own while growing up. This kind of maturity has not been possible at that age because our parents also had been pampered in our fashion. The thought process or growing naturally could never be possible in our society as we were used to get ourselves compared with person next door or opposite of our home with name calling with phrases “Be like Ramesh or Look out for Suresh” (just mentioned for the sake of ) who seemed to be our role models at that fragile age and pity is that our temptations are subdued and our passions are out to dustbin during the process of creativity.

    STOICISM makes one Existentialist…

    Being stoic does mean that one has to take a middle path not being carried away by the results that are coming through out of our life because of our actions or actions of others in which we are in no way connected.

    Karma is being explained as a result of consequences of our own actions but for the actions of the natural calamities like psunami, land slides, earth quake, floods and Fire, universal law can’t be questioned?

    We can understand the cause of it, making corrections but acceptance is the main principle of the law of universe ( birth and death)

    In the same breath if one examines the sufferings, the immediate solution is to carry on with the cause and time would be coming to our rescue with healing touch provided we follow PATIENCE.

    Of course, every feeling is due to external factors associated, it is imperative that we must try to calm our nerves with subtle thoughts so that feelings don’t necessarily get carried away into anger which kills the body of the person who manifest simultaneously damaging the mind as well.

    So, we need to be meditative by taking our time out and feeling relaxed before reacting….

    If at all forced to react, take all possible steps to be pro-active.

    Taking positive position is prerequisite for “being proactive”.

    A Simple Prayer of Gratitude.

    Lord, for the blessings you have bestowed on my life.

    You have provided me with more than I could ever have imagined.

    You have surrounded me with people who always look out for me.

    You have given me family and friends who bless me every day

    Selvaraj

Leave a Reply to Selvaraj Raman Cancel reply

Your email address will not be published.

கடந்தவை

திரட்டு

சேகரம்

Go toTop