
உறைந்த இரத்தக்கட்டி போல
கம்பு வயலில் ஏதோ ஒன்று அவனைப் பீடிக்கிறது
ஆனால் வாழ்க்கையில் எதுதான் நியாயமானது
வைத்தியசாலைத் தாழ்வாரங்களில் அவன், ஒரு காலை இழந்து நொண்டிக்கொண்டு திரிவது எரிச்சலைத்தருகிறது
அதிசயங்கள் எதுவும் நிகழாத அந்த வயல்களில் முன்பே ஏதோ
ஒரு காலில்லாமற் திரிந்தவன் போல இரத்தத்தில் தோய்ந்தவனாக.
தன்னை மறந்து எந்தக்காலும் விழுவதில்லை.
பொருந்தாத இரத்தத்தைக் கொண்டவர்களை இரத்ததானத்தில் நிராகரிப்பது போன்று
சலிப்பு நிறைந்த போரின் பதிவேடுகளில் அவயவங்கள் முகங்கள் மற்றும் உடல்கள் நிராகரிக்கப்படுகின்றன.
அவனது அணிகள் அக்கம்பு வயல்களில் சிதறிக் கிடக்கின்றன
அவன் தன் கண்களை மூடிக்கொள்ளும்போது அவர்களை ஒன்று சேர்க்கத் தொடங்குகிறான்
உணவு உடை மற்றும் ஒளடதங்களைங்களைக் கொண்டு வரும் பெண்கள் அவ்வாறு செய்வது தமது வழமை என்பது போல
அவன் காலடியில் அமர்கிறார்கள்
***
Poet’s Bio: Halyna Kruk (Lviv, Ukraine, 1974)
Translated from the Ukrainian
by Sibelan Forrester and Mary Kalyna with Bohdan Pechenya
ஹலீனா கிறுக் உக்ரேனிய இல்விவ் (Lviv)பல்கலைக் கழகத்தில விரிவுரையாளராக விருக்கிறார். உக்ரேனிய மத்திய கால (500 – 1500) இலக்கியத்தில் ஆய்வுப்பட்டம் பெற்றவர் கவிதை மற்றும் சிறுகதை ஆசிரியர். நான்கு கவிதைத் தொகுப்புக்களை வெளியிட்டுள்ளார்.
000
I dream of explosions
நான் குண்டு வெடிப்புக்களைக் கனவு காண்கிறேன்
யாரோ ஒருவர் கட்புலனாகாத கையால்
அடர்ந்து எரியும் தீக்கு நெருப்பு வைக்கிறார்
தெரியவில்லை
பாதுகாப்பான இடமென்று இவ்வுலகத்தில் எதுவுமில்லை
உலகென்ற ஒன்றே இனிமேலில்லை
அங்கே ஒன்றுமில்லை
“ஏதாவது இருக்கிறதா” ? இச்சொற்களை இனிப் பாவிக்க எப்படி முடியும்!
முழு உடலும் கண்ணாக மாறுகிறது
உண்மையான விரிந்த பார்வையை அடையப்பிடிமானமொன்று தேவை.
அரிதட்டினூடே விழுவது போல உலகத்திலிருந்து விழுகிறாய்
அப்பொழுது நீ பார்க்கிறாய்: அது அங்கே இல்லை
அது ஒரு மாய்மாலம்
ஆனாலுமது இன்னுமேன் கடும் நோவைத் தருவதாக இருக்கிறது?
***
ஒக்சானா லுட்சிஷைனா
Oksana Lutsyshyna
Translated from the Ukrainian by Oksana Maksymchuk
and Max Rosochinsky
Oksana Lutsyshyna உக்ரேனில் பிறந்தவர். எழுத்தாளர் மொழி பெயர்ப்பாளர் ரெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் உக்ரேனியன் மொழி மற்றும் கிழக்கு யூரோப்பிய இலக்கியங்களைக் கற்பிற்பவராகக் கடமையாற்றுகிறார். ஒப்பீட்டு இலக்கியத்தில் ஜோர்யியப் பல்கலைக் கழகத்தில் முதுகலைமானிப் பட்டம் பெற்றிருக்கிறார்.
000

தேவ அபிரா
தேவ அபிரா (Theva Abira) ஈழத்துத் தமிழ் கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். யுத்த காலத்தின் காயங்கள், ஈழத்தின் அரசியல் சூழல், மற்றும் சமூகப் பிரச்சினைகளை மையமாக வைத்து இவர் கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய "இருள் தின்ற ஈழம்" போன்ற கவிதை நூல்கள் குறிப்பிடத்தக்கவை
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.




















