
எழுத்தாளர் பெருமாள்முருகன் முதன்மையாக புனைவாசிரியராகவே இலக்கியச் சூழலில் அறியப்பட்டிருக்கிறார். அடுத்தபடியாக அவருடைய பண்பாட்டு ஆய்வுக் கட்டுரைகள் பரவலாக கவனம் பெற்றுள்ளன. ஆனால் இவற்றைத் தாண்டி தமிழ்நாட்டின் கல்விச் சூழல் சார்ந்தும் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். “சாதியும் நானும்”, “மனதில் நிற்கும் மாணவர்கள்” முதலிய நூல்கள் வெளிவந்துள்ளன.
பெருமாள்முருகன் கல்வித் துறையில் நீண்ட அனுபவம் உடையவர். வெவ்வேறு கல்லூரிகளில் பேராசிரியராகவும், பிற்பாடு முதல்வராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனவே நம் உயர்க் கல்வித் துறையை மட்டும் மையப்படுத்தி -அதன் பல்வேறு அடுக்குகளையும் சிக்கல்களையும் அதில் தேவைப்படும் சீர்த்திருத்தங்களையும் பேசும்விதமாக- அவருடன் ஒரு உரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. டோக்கியோ அறிவியல் நிறுவனத்தில் வேதியியல் துறை ஆய்வாளராக பணியாற்றும் எழுத்தாளர் விஜயகுமார் இதை முன்னெடுத்துள்ளார். இது “மம்மர் அறுக்கும் மருந்து” எனும் தலைப்பில் ஒரு தொடராக, வாரந்தோறும் வியாழனன்று, அகழில் வெளியாகும்.
அகழில் இதுவரை கலை இலக்கிய ஆக்கங்களே பெரும்பாலும் வெளிவந்துள்ளன. எழுத்தாளர்களின் விரிவான நேர்காணல்கள்கூட இலக்கியம் சம்பந்தப்பட்டவையாகவே இருந்துள்ளன. அவ்விதத்தில், இத்தொடர் ஒரு புதிய முயற்சி. இதை முன்னெடுக்கும் விஜயகுமாருக்கும், ஈடுபாட்டுடன் பங்களிக்கும் பெருமாள்முருகனுக்கும் நன்றி.
அகழ் ஆசிரியர் குழு
Discover more from
Subscribe to get the latest posts sent to your email.