தீக்குடுக்கை : குறைந்த பக்கங்களில் ஓர் பெரிய நாவல்

தமிழ் இலக்கியத்தின் சிறுகதைப் பிறப்புகள் மிகவும் கவனத்திற்குரியன. எனது நீண்ட கால வாசிப்பில் தமிழ்ச் சிறுகதைகளை அதிகம் ரசித்துள்ளேன். ஒவ்வொரு தேசத்தில் வாழும் தமிழ் எழுத்தாளர்களும் தமது பாணியில் தமது வாழ்வுள் நுழைந்த பக்கங்களை அதிகம் எழுதுகின்றார்கள். இந்த எழுத்துகளில் பல உலக வாசிப்பிற்கு அவசியமானவை.
அனோஜன் இலங்கையில் பிறந்து லண்டனில் வாழ்பவர். போர்களும், கொலைகளும், புகலிடமும் இவரது விழிகளிற்குத் தெரியும். ஆனால் இவரது அவதானிப்புகள் எங்கும் செல்வன. இந்தச் வழிகளது நெறிகளே இவரது சொல்களது கலாசாரம் எனலாம். குளிரும், சூடும் உள்ளதுதான் இவர் தமிழ் இலக்கியத்திற்கு வழங்கும் எழுத்துப் பண்பு.
புகலிடம் பெரியது. எமது இலங்கைப் புகலிடம் சிறியது அல்ல. இந்த இடத்தின் இலக்கிய நுண்மைகளை எமக்குத் தருவோர் சிலர். இவர்களில் ஒருவர் அனோஜன்.
மனிதம் காப்பது அவசியம். மொழி காப்பதும் அவசியமே. மொழிகளைக் காப்பது என நான் சொல்ல வருவது மொழி மீதான வெறிகளைக் காப்பதல்ல. அனைத்து மொழிகளும் எமது மானிடத்தின் ஆன்மாக்கள், தெய்வங்கள்.
“தீக்குடுக்கை” போரின் நினைவுகளில் அலைந்து வேறு பல நினைவுகளைச் சுமக்கும் இலக்கிய உத்தியின் நாவல் என்பது வாசிப்பு ஓர் வழியில் அல்ல பல வழிகளிலும் தவழ்வதே எழுத்து இயக்க மேன்மை என்பது “பேரீச்சை” எனும் இனிய சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியரிற்கு மிகவும் நன்றாகவே தெரிந்துள்ளது.
தேசத்தின் போரின் பக்கங்களை புகலிட இருப்புடன் அழகிய மொழியில் எமக்குத் தருவது “தீக்குடுக்கை”.
கவனமாகக் கதைகள் சொல்வதில் உலக நாடுகளில் பலர் உள்ளனர். ஆனால் எமது மனித இருப்புகளது உடைப்புகள் மீது சொல்லும் சிலர்களில் எனக்கு விருப்பம் தருபவர்களில் ஒருவர் “தீக்குடுக்கை” தரும் எழுத்தாளர்.
எமக்குத் தியான விருப்பைத் தருவதே அனோஜன் தமிழிற்கு வழங்கும் இலக்கியம்.
சால்ட் வெளியீடு, இணையத்தில் வாங்க.
- க.கலாமோகன் – எழுத்தாளர்
௦௦௦
டாங்கோ : குணா கந்தசாமி

மென்பொருள் உலகில் பணி செய்யும் நாவலாசியரின் புதினம்.
எழுத்தாளர் குணா கந்தசாமி தனது இரண்டாவது நாவலாக இதை எழுதியுள்ளார் . நேர் பாணியில் பயணிக்கும் இந்நாவல், எங்கும் தேவையில்லாதவை என்ற எண்ணமே ஏற்படாத வகையில் தோன்றச் செய்வதன் மூலம் தேர்ந்த கதை சொல்லி என தன்னை நிறுவுகிறார்.அர்ஜெண்டினா உருகுவே எல்லையோரம் ரியோ தெ லா பிளாட்டா (ரியோ டி லா பிளாட்டா – நதித்தட்டு) நதியோரம் நடக்கும் நிகழ்ச்சியாகவும் , டாங்கோ என்ற ஆண் பெண் இணைந்து ஆடும் அந்நாட்டின் நடனத்தை குறிப்பிட்டு, அதன் முரண்பாடுகளையும், இணைவையும் நாவலின் குறியீடாக பயன்படுத்தி நாவலை செழுமைப்படுத்தியுள்ளார்.
நதியும், கடற்கரையும் இணையும் இடம் கழிமுகப் பகுதி (காயல்) இயற்கையாகவே அமையும் அற்புதமான இடம் . “ரியோ தெ லா பிளாட்டா” என்ற நதியும் அட்லாண்டிக் பெருங்கடல் இணையும் இடத்தில், மாண்டி வீடியோ என்ற நகரில் மென்பொருள் பணியின் பொருட்டு, ஆனந்த் என்ற இளைஞரின் வாழ்வில் ஏற்படும் மனக்குழப்பங்களும், தெளிவுமே இந்நாவல்.
தந்தையைப் பார்க்காத , தாயின் சிறு வயது புகைப்படம் மட்டுமே வைத்திருக்கும் மாமாவின் ஆதரவில் தங்கி படிக்கும் இல்லங்களில், தன் வாழ்வைத் தனிமையில் வாழ்ந்து, கல்லூரியிலும் விடுமுறையில் மாமாவின் வீட்டிற்கு போக முடியாமல், நன்றாகப் படித்து, கம்யூட்டர் துறையில் மென்பொருள் பிரிவில் நல்ல பயிற்சி பெற்றவனாக இருக்கிறான் ஆனந்த். இந்தியாவில் நட்புவட்டாரங்கள் குறைவு என்றாலும், தனிமை, ஆதரவற்ற நிலையின் காரணமாகப் பள்ளியில் படிக்கும் போது, கல்லூரியில் , ஹாஸ்டலில் தங்கி படிக்கும் போது தன் நிலையுணர்ந்து , கல்வி மட்டுமே தன் விடுதலை என படித்து மென்பொருள் விற்பனன் ஆகிறான்.
உள்ளுர், பெங்களூர் போன்ற இடங்களில் பணிபுரிந்து , அதன் நீட்சியாக வெளி தேசத்திற்குச் சென்று, தனிமையில் வந்து வாழ பழகுகிறான். ரியோ டி லா பிளாட்டா , மாண்டி வீடியோ நகரின் வீதிகளையும், கடற்கரை பகுதிகளையும் உயிரோட்டமாக சித்தரித்தது, அந்நகரில் வசித்து அதை சுற்றி பார்த்ததினாலும் அனுபவித்ததாலும் மிகச்சிறப்பாக துல்லியமாக பதிவு செய்துள்ளார். ஆற்றின் கரையை , தங்கியிருக்கும் கடற்கரையை பார்த்த அறையும் கண்முன்னே தெரிகின்றது.
மிகப்பெரிய ஆச்சரியம் இந்நாட்டில் காந்தி சிலை இருப்பதும், றாம்ப்லா காந்தி சிலை என அழைப்பதும். எழுத்தாளர் காந்தியை பின்தொடருபவர் என்பதும் தெளிவு. நாவலின் பல நிகழ்வுகளில் காந்தியின் சுயசரிதையை, கொள்கைகளை, நடைமுறைகளை கையாள்கிறார்.
தனிமையில் வெளிநாட்டில் வாழும் இந்தியனாக தனக்குள்ளே சுருண்டு கொள்ளும், மனம் தடுமாறும் சாதாரண மனிதனாக , மதுப்பழக்கம், கஞ்சா, சிகரெட், பெண் என திரிந்தாலும், சந்தியாவின் வருகையில் தான் ஒரு நிலைக்கு திரும்பி , இருவருக்குள்ளும் ஏற்படும் மனவிலக்கம் போன்ற தருணங்களில் கையாளும் நாவலாசிரியரின் மொழிநடை , தத்துவங்கள், விவரிப்புகள் இந்நாவலை மேலும் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
மொத்தத்தில் இந்நாவலுக்கு தனக்கு தேவையான இடங்களில் அந்நாடுகளில் வசிக்கும் மத்தியாஸ், வெரோனிகா, மார்செலா போன்றோரும் இந்நாவலை அடுத்தடுத்த நகர்விற்கு எடுத்து செல்கின்றனர்.
ஆனந்த் தனக்கு என்ன தேவை என்பதை சந்தியாவின் வருகை தெளிவுபடுத்துகிறது. சந்தியா இன்னொரு தாயாக மாறும் கணத்தை எதிர் பார்ப்பவன் அப்படி மாறினால் என்னாகும்?, இந்நாவல் சாதாரண கதையாடலாக மாறி வலுவிழந்திருக்கும். பெண்ணின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும், அளவிற்கு தன்னை மாற்றிக் கொள்ள முடியாமல் சாதாரண இந்தியனாக, அதன் பழக்க வழக்கங்களில் தோய்ந்த மனிதனாக மாறிய ஆனந்திற்கு தெளிவான வாழ்க்கை பாடத்தை சந்தியாவும், காந்தியும் சுட்டிகாட்டுகின்றனர்.
முடிவாக எழுத்தாளர் பிரபஞ்சத்தின் நோக்கமாக குறிப்பது, “உலகம் அன்பையும் ஜீவகாருண்யத்தையும் மட்டும் பயின்றுகொண்டு இருக்கவில்லைதான். அது மாபெரும் வதைக்கூடமாகவும் சில சமயங்களில் புராணங்களில் சித்திரிக்கப்படும் நரகத்தை ஒத்தும் இருக்கிறது. ஆயிரமாயிரம் வருஷங்களாக மனிதனைத் தரப்படுத்தும் வேலை நடந்துகொண்டிருந்தாலும் மிருகநிலைக்குக் வீழ்ந்துவிடும் சாத்தியம் எப்போதும் பின்தொடர்கிறது. தன் பலகீனங்களோடு மனிதனுக்கு இடையறாத போராட்டம். ” (நாவலிலிருந்து)
போராட்டம் மட்டுமே வாழ்க்கை ஒவ்வாரு கணமும் மனிதன் வாழ்க்கை பாடத்தையும் , வாழும் முறையையும் கேள்விக்குள்ளாக்கி விடை தேடும் படலமே வாழ்வு.
எதிர் வெளியீடு, இணையத்தில் வாங்க
- கலித்தேவன் – எழுத்தாளர்
***
உறங்கும் அழகிகளின் இல்லம்

ஜப்பானிய மொழியில் 1961 ல் வெளியான நாவல். நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்
யசுனாரி கவபட்டா எழுதியது. இந்நாவல் நிச்சயம் ஒரு ஆவணம் . இது சமுதாயத்தில் ஏற்பட்ட உண்மையான நிழ்வுகளை வரலாற்றில் பதிவு செய்கிறது.
‘எகுச்சி’ என்ற கதாப் பாத்திரத்தின் மூலம், எழுபது வயதுக்கு மேலுள்ள முதியவர்கள்
தங்கள் உளநிலை, உடல் நிலையை பற்றி தாங்களே தெரிந்து கொள்ள இது ஒரு
வழியாகப் பயன்பட்டுள்ளது என ஜப்பானில் நம்பப்பட்டதாக எடுத்துக கொள்ளலாம்.
உண்மையாகவும் இருக்கலாம்.
எகுச்சி ஐந்து இரவுகள் உறங்கும் அழகிகள் இல்லத்தில் தங்குகிறார். தங்கும் ஒவ்வாரு
இரவிலும் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களே இந்நாவல்.
பொதுவாக அறுபது வயதுக்கும் மேலே ஆண்களின் பாலியல் வேட்கையும் உடல்,
உளநிலையில் மாற்றங்கள் ஏற்படுவதாகவும் , பாலியலில் நாட்டம் அதிகமாகி உடல்
ஒத்துழையாமல் போகவும் வாய்ப்பு அதிகம் என்று நம்பப்படுவது. அம்மாதிரியான
வயதானவர்களுக்காகவும், அதை விட அதிக வயதானவர்களும் தங்குவதற்காக
ஏற்படுத்தப்பட்டது ஒரு நிலையம்; அதுதான் உறங்கும் அழகிகளின் இல்லம். இல்லத்தில் உறங்கும் அழகிகள் பயன்படுத்தும் வாசனை திரவியங்களும், இயல்பாகவே உடலுக்கு என்ற மணமும் நபருக்கு நபர் மாறுபடுவதும் , அவ்வாசத்தினால் கிளறப்படும் நினைவுகள் மனதின் நுழைய முடியா ஆழங்களில் உள்ள பல சிடுக்கான நிறைவேறாத
வக்கிரமான ஆசைகளையும் , உண்மையான முகத்தை வெளிக்கொண்டு வருகிறது. முதல் முறை எகுச்சிக்கு பால் வாசனையால் கிளறப்பட்ட இளமை கால நினைவுகளை பதிவு செய்திருப்பதும், அதன் வழியே உள உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களும்
முதியவர்களுக்கு உண்டாகும் அவஸ்தைகளை சொல்வதும் நன்றாக நாவலில் வெளிப்பட்டுள்ளது.
அறுபத்தியேழு வயது முதிர்ந்த மூன்று பெண்களின் தந்தையுமான எகுச்சி
அவ்வில்லத்தில் முழு நிர்வாணமாக உறங்கும் அழகிகளோடு ஐந்து இரவுகள் தானும்
நிர்வாணமாக தங்கும் நாட்களில் தனக்குள் ஏற்படும் உள நிலை, உடல் நிலையில் மாற்றங்கள், பழய மறக்கப்பட்ட நினைவுகள் கிளர்ந்தெழுந்து உறங்கும் அழகிகளோடு
உணர்ச்சி மேலிட்டால் விபச்சாரம் செய்யாதிருக்க தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி
உறங்குவதும் காலையில் எழும் நேரம் புத்துணர்வாகவும், தன்னை பற்றிய தன் வயது
பற்றிய சிந்தனைகளை ஒழுங்கு படுத்த இம் முறை பயன்படுவதாக ஜப்பானியரின் ஒரு
வித முற்போக்கு எண்ணம் என்றும் சொல்லலாம்.
ஐந்தாவது இரவில் தங்குற்கு முன்பு அவரை விட வயதான புகுரா என்ற பணக்காரார்
மாரடைப்பில் அங்கு இறந்ததை நாளிதழில் படித்திருப்பதும் அதை பற்றி
விசாரிக்கையில் உணர்ச்சி மேலிட்டால் அவர் இறந்து நள்ளிரவில் அவர் உடலை
இடம் மாற்றியதை தெரிந்து கொள்கிறார். கடைசி இரவில் கருப்பு, வெள்ளை
நிறத்தில் நிர்வாணமான இரு பெண்களுடன் தங்கும் வேளையில் அவருக்கு தானறிந்த
முதல் பெண் தன் தாயென ஆழ்மனதின் மூலம் அறிந்து கொள்கிறார். ஒவ்வாரு
ஆண்மகனும் முதன் முதல் அறிந்து கொள்ளும் பெண் தன் தாய் தான் என உளவியில்
பூர்வமாக நிரூபிக்கபட்ட ஒன்று.
இவ்வில்லங்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் உயர்வானவை . மிகவும் வயது
முதிர்ந்த ஆண்கள் தங்குவதற்காக இரவு முழுவதும் விழிக்காத ஏதோ ஒரு விதத்தில்
தூக்கம் தரும் பானம், மாத்திரை பயன்படுத்தி இளம் பெண்களை நிர்வாணமாக
உறங்க வைத்து முதியவர்களை மட்டும் இவ்விலங்களில் அவர்களுடன்
முழுநிர்வாணமாக உறங்க வேண்டும் , இயற்கையாக உறங்க முடியாமல் போனால்
தூக்க மாத்திரைகள் மூலம் உறங்க வேண்டும் , விபச்சாரத்தில் ஈடுபடக்கூடாது
என்பது உறங்கும் அழகிகளின் இல்ல சட்டம். இவ்வில்லத்தில் தங்கும் முதியவர்கள்
உறங்கும் நிர்வாண அழகிகளிடம் விடுதியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே தங்க
வேண்டும். இரவில் தங்கும் பெண்களுடன் பகலில் சந்திக்க வே கூடாது எனவும், ஒரு
முறை தூங்கிய பெண்ணுடன் மீண்டும் தூங்குவதை அனுமதிப்தில்லை.
இச்செய்கையின மூலம் வயதானவர்களின் பாலியல் வேட்கையின் தீவிரத்தன்மை,
செயல்படும் விதமும், அவர்களின் வீரியம் ,பல மறந்த ஞாபகங்களை ,சிறு வயது
நினைவுகளை மீட்க உதவுதாக நம்பினர் , (சொல்கிறார்கள்)
கடைசி இரவில் கருப்பான இளம் பெண் இறந்து விட்டதாக கூச்சலிட்டு விடுதி
உரிமையாளரை அழைத்து சொல்லுவதும் , புகுரா என்ற மனிதர் ஞாபகம் வருவதோடு
நாவல் நிறைவு பெறுகிறது.
உறங்கும் அழகிகள் இல்லத்தினால் வயதானவர்களின் சிகிச்சைக்கு பயன்பட்டாலும்,
இருபது வயது இளம் பெண்கள் இச் செயலில் ஈடுபடுத்தப்படுவதும் . அவர்களுக்கு
தன்நிலை மறந்து உறங்க அளிக்கப்படும் வீரியம் மிக்க மருத்துகளால் பிற்காலத்தில்
அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும், பெண்களுக்கு இழைக்கப்படும் மறைமுக
கொடுமையாகவும் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. ஆண்பெண் உறவில்
இருவருக்கும் பங்கிருக்க வேண்டும். காலம் காலமாக பெண்களே பாலியல்
துன்பத்திற்கு ஆளாகிறார்கள். வயதான ஆண்களின் கடைசி ஆசையாக கூட
இருக்கலாம். அதற்காக இளம் பெண்கள் தங்கள் வாழ்க்கையை பாழடித்துக்
கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது.
காந்தியே ஆண்மபரிசோதனை , பிரம்மச்சரியம் என்ற ஆராய்ச்சியில் இளம்
பெண்களை பயன்படுத்தியதாக அவரே பதிவு செய்துள்ளார். அவரும்
விமரிசிக்கப்பட்டதை உலகம் அறியும்.
யசுனாரி கவபட்டா (ஜப்பானிய நாவல்) தமிழில் – அரிசங்கர்.
எதிர் வெளியீடு, இணையத்தில் வாங்க
- கலித்தேவன் – எழுத்தாளர்