இசை கவிதைகள்

1.

எதையும் மறந்துவிடவில்லை அல்லவா?

புறப்பட்டுப்
போகப் போகிறது
மே ஃப்ளவர்

2.

ஒரே ஒரு சின்னச் சிக்கல்

இல்லாமல் இருக்கப்
பழகிக்கொள்ள வேண்டும் நீ

அதில்
சிக்கல் என்னவெனில்

நீ
இருப்பது

3.

வெஞ்சரம்

நஞ்சில் புரட்டிய அம்பால்
இதயத்தின் ஆழத்தைக் குடைவது
வெகு எளிது
உனக்கு

‘நீ’ யிலிருந்து ‘ நீங்களு’க்காய்
ஒரு நொடிப் பொழுதின் சாகசம்

4.

பார்க்கப் பார்க்க

உன் ஈரக்கூந்தலை
அடித்து உதறியதில்
தெறித்த திவலைகளென
வெளி முழுக்கச்
சிவந்து நிற்கிறது
மே ஃப்ளவர்

ஜுன்
வந்து கொண்டிருக்கிறது

இசை

கவிஞர் இசை தமிழில் நவீனக்கவிதைகளை எழுதி வரும் கவிஞர். மென்மையான நகையுணர்வு கொண்டவை இவருடைய கவிதைகள். உறவுகளின் சிக்கல்களையும் சமகாலத்தின் அரசியலையும் கேலி இல்லாமல் புன்னகையுடன் கூறுபவை.

நன்றி : தமிழ் விக்கி


Discover more from

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments உரையாடலுக்கு

  1. அருமையான கவிதைகள். ‘நீ நீங்களாக மாறுவதென்பது திரும்பி வர முடியாத தொலைவுகளுக்கு நாம் சென்று விட்டோமென்பது தானே. ❣️

  2. இந்த மே மாதத்துக்கு இத்தனை வீம்பு ஆகாது. ஒரு மாகவிஞன் கையைப் பிடித்து நிறுத்தியும் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருக்கிறதே? திரும்ப மே வரும். திரும்ப மே ஃப்ளவர்கள் வரும். நம்பிக்கைதானே வாழ்க்கை.

உரையாடலுக்கு

Your email address will not be published.

திரட்டு

சேகரம்

Latest Posts

Go toTop

Don't Miss